இன்று அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளியினால் நாவலப்பிட்டி கெட்டபுலா புதுக்காடு தோட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 14 தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.
குறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
அனைத்து புகையிரத தொழிநுட்ப சேவையின் ஒப்பந்த மற்றும் மேலதிக பணியாளர்களை உடனடியாக சேவைக்கு சமூகமளிக்குமாறு புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மன்னார் நகர நுழைவாயில் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில், நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, மேலும் சில மனித எலும்புத் துண்டுகளும் மனித பற்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றின் பிரதேச செய்தியாளர் மற்றும் பத்திரிகை விநியோகஸ்தர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் நிவாரணக் குழுக்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் வீதியில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் கத்தோலிக்க கன்னியர் மடம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்த மரியன்னையின் சிலை நேற்று இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக திடீர் அனர்த்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்ததாக இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
கொச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 227 பயணிகளுடன் இன்று மாலை கிளம்பிய ருடு 167 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம், ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் மோதியுள்ளது.