பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்ரீசியா ஸ்கொட்லண்ட் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இன்று பகல் சிங்கப்பூரில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 348 என்ற விமானம் மூலம் அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். நான்கு நாள் விஜயமாக அவர் இலங்கை வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. 2016ம் ஆண்டு செயலளராக பதவியேற்றதன் பின் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸாரினால் பொதுமக்களுக்கு வழங்கும் சேவையை மேலும்விரிவு படுத்துவதற்காக இலங்கை பொலிஸாருக்கு 600 ஜீப் வாகன வண்டிகளையும் பொலிஸ் அதிரடிப்படைக்கு 150 ஜீப் வாகனங்களையும் வழங்குவதற்காக இந்திய நிதி உதவியின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேசத்தின் அனைத்து கிராம உத்தியோகஸ்தர்களும் இன்று காலை தொடக்கம் துறைசார் செயற்பாடுகளில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் தொழில் பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று மன்னார் கவனயீர்ப்பு பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, வாழைச்சேனை சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு கோரி பிரதேச மக்கள் சிலர் இன்று கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தியோகப்பூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை கோருவதற்கான உரித்து பொது எதிரணிக்கு இல்லை. அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகித்துக்கொண்டு அதே கட்சியை சேர்ந்தவர்கள் உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சியாக இருக்க முடியாது.
மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்று இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.
அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மீண்டும் திறந்த பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.