Header image alt text

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றிற்கு அறிவிப்பதற்காக நியமிக்கப்பட்ட விஷேட தெரிவு குழுவிற்கு, இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரால் சாந்த கோட்டேகொட அழைக்கப்பட்டுள்ளார்.

இன்றுகாலை 9மணியளவில் அவர் தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றார். முதலாவது சாட்சியாளராக அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை சாட்சி வழங்கல் இடம்பெறவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. Read more

பௌத்த பிக்குவால் கணதேவி தேவாலயம் என பெயர்மாற்றப்பட்ட நீராவியடி பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கட்டளைப்படி மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் குறித்த சர்சைக்குரிய ஆலயம் தொடர்பான வழக்கு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்த்தினரால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்டநீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more

பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தை அழித்து கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.

இந்த மனு முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் விசாரிக்கப்பட்டு ஆகஸ்ட் 06ம் திகதி தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. எனினும் மனுவை மனுவை மீண்டும் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அது எதிர்வரும் ஜூலை 31ம் திகதி ஜனக் டி சில்வா மற்றும் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. Read more

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிக்குகள் உள்ளிட்ட பலர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் குருநாகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

தும்மலசூரிய பகுதியிலிருந்து இராணுவத்தினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியிலிருந்து பெற்றோல் குண்டுகள் எட்டும், வாள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமானளவு பணத்தை உடன் வைத்திருந்ததாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களை எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகபேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கருத்து தெரிவிக்கையில்,

மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இனங்களுக்கு இடையில் பகையையும், குரோதத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. Read more

கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை மருத்துவமனை மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான விசாரணைக்கு சுகாதார அமைச்சு விசேட குழு ஒன்றை நியமிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா மருத்துவமனையின் குறித்த மருத்துவருக்கு எதிராக இன்று மாத்திரம் 51 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில், சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி கடந்த 24ம் திகதி குருணாகலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின் அவ் மருத்துவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். Read more

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுனவர்த்தன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். யாழ் காங்கேசன்துறையில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அலுவலகத்தில் பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையுடன் அவர் அழைத்துவரப்பட்டார்.

பின்னர் மத தலைவர்களின் ஆசியுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்த ரொசாந்த் பெர்னாண்டோவுக்கு இடமாற்றம் கிடைக்கப் பெற்றதை அடுத்து தென் மாகாணத்தில் கடமையாற்றி வந்த விஜய குணவர்த்தன வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவி புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஹொரவபொத்தானை பிரதேசத்தின் அதிபர் உள்ளிட்ட 5 பேர் எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 22ம் திகதி கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபர்களுள் உப அதிபரொருவரும் காணப்படுகின்றார். இவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினரான அப்துல் மஜீத் மொஹமட் நியாஸ் என்ற நபருடன் நெருங்கிய தொடர்பினை பேணி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது காத்தான்குடியைச் சேர்ந்த பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் என பொலிஸார் அடையாளம் கண்டு பிடித்ததையடுத்து. குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினர், பொலிஸார், மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் கடந்த ஒரு மாத காலத்தில் 63 பேரைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். Read more