Header image alt text

dsc05031தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு நிதியத்தின் உதவியுடன், மாமடுச்சந்தி, பழம்பாசியில் “மரக்கறி பழம் பொதியிடல் நிலையம்” நேற்று (11.10.2016.) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், கந்தையா சிவநேசன், முல்லைதீவு அரசாங்க அதிபர், ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் நந்தசிறீ, மேலதிக விவசாயப் பணிப்பாளர் நாயகம், Read more

img_9358மலையகத்தில் தொடரும் சம்பள உயர்வு உட்பட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா வாழ் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் இன்றயதினம் பேரணியொன்று சிந்தாமணி ஆலய முன்றலில் ஆரம்பமாகி வவுனியா பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆதரவு கோரிய கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதிக்குரிய மகஜர் கையளிப்புடன் ஆதரவு பேரணி நிறைவுபெற்றது.
Read more

sfdமனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென ஐ.நாவின் சிறுபான்மையினர் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். Read more

sfdfதமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிராதன பிரச்சினைகளான காணி கையகப்படுத்தல் மீள்குடி யேற்றம், காணாமல்போனவர் விவகாரம், மற்றும் அரசியல் கைதிகள் விடயம் ஆகிய வற்றிற்கு தீர்வு கிடைக்காத நிலையில் நல்லிணக்கம் என்பது சாத்தியப்படாது என வட மாகாண அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையின உரிமைகள் தொடர்பான விஷேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா இன்று யாழப்பாணத்திற்கு விஜயம் செய்து வடமாகாண அமைச்சர்களை சந்தித்தபோது அவர்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றனர். Read more

graduateவேலையற்ற பட்டதாரிகளால் மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு, காந்தி பூங்கா வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை, வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு நிரப்புமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

sadsdநிலவும் கடும் வரட்சி காரணமாக, நாட்டின் சில பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை கிராமத்தில் 162 குடும்பங்கள் வாழ்கின்றனர். Read more

lanka-philipineபிலிப்பைனஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் வீசா நடைமுறை தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர் பிரிபெஃக்டோ யாசே மற்றும் இலங்கைத் தூதுவர் அருணி ரனராஜ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக, வெளிவிவகார திணைக்களம் கூறியுள்ளது. Read more

election.....உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது கலப்பு தேர்தல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடத்தப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் நிரந்தர பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்குமிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். Read more

ranilஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொண்டு நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பற்றி தொடர்ந்தும் கலந்துரையாட எதிர்வரும் எதிர்வரும் சனிக்கிழமை தான் பிரேசில் நகருக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

frgfgfயுத்தத்தினால் முகத்தில் காயப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து மறைந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவினர், இதனால் அவ்வாறானவர்களுக்கு இலவசமாக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த சத்திர சிகிச்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவின் மாவட்ட ஆளுநர் வைத்திய கலாநிதி வைத்திலிங்கம் தியாகராஜா தெரிவித்துள்ளார். Read more