Geneva UNஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் கொண்டுவரப்­பட்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்ற மாட்­டேன் என்று ஓர் அரசு தெளி­வா­கச் சொல்­லு­மி­டத்து, அவர்­க­ளுக்கு அதே தீர்­மா­னத்தை நிறை­வேற்ற கால அவ­கா­சம் வழங் ­குவது ஐ.நா. உரி­மை­கள் சபை­யின் நம்­ப­கத்­தன்­மையைக் கேள்­விக்­குட்­ப­டுத்­தும்.

இவ்­வாறு தமிழ் சிவில் சமூக அமைப்­புக்­கள், தொழிற்சங்­கங்­கள், அர­சி­யல் கட்­சி­கள், ஐ.நா. மனித உரி­மை­கள் சபைக்கு கூட்டு விண்­ணப்­பம் செய்­துள்­ளன. இலங்கை அர­சுக்கு கால அவகாசம் வழங்­கு­தல் நீதிக்­கான தேடலை நீர்த்­துப் போகச் செய்­யும். வடக்கு – கிழக்­கில் வாழு­கின்ற தமிழ் மக் கள் சுயா­தீ­ன­மான பன்­னாட்டு விசா­ர­ணையை வலு­யு­றுத்தி வந்­துள்­ள­னர், தொடர்ந்து வலி­யு­றுத்­து­கின்றனர். இலங்கை அரசு கலப்பு நீதி­மன்ற முறையை நிரா­க­ரித்­த­மை­யா­னது உள்­நாட்­டில் தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைப்­பதை இன்­னும் சாத்­தி­ய­மற்­ற­தாக்­கின்­றது. தமிழ் மக்­க­ளுக்கு உண்­மை­யான நீதி கிடைக்க வேண்­டு­மெ­னில் இலங்கை அரசு இழைத்த பெரிய குற்­றங்­கள் தொடர் பில் விசா­ரிக்­கத் தனி­யான பன்­னாட்டுத் தீர்ப்­பா­யம் அமைக்­கப்­பட வேண்டும்.

அல்­லது பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றில் விசா­ரிக்­கப்­பட வேண்­டும். இது தொடர்­பில் முன்­னெ­டுப்­புக்­களை முடுக்கி விடு­தல் ஐ.நா. அமைப்­பின் கட­மை­யா­கும். அதுவரைக்­கும் ஐ.நா. மனித உரிமை மீறல்­களை கண்­கா­ணிக்க மனித உரிமை செய­லா­ளர் நாய­கத்­தின் அலு­வ­ல­கங்­கள் வடக்கு-­­கி­ழக்­கில் உரு­வாக்­கு­தல் அவ­சி­ய­மா­கின்­றது – என்று அந்­தக் கூட்டு விண்­ணப்பத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.