நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் நிலவுகின்ற சிக்கல்கள் குறித்த, கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நாளை மறுதினம் (26.10.2017) பிற்பகல் 3மணியளவில் தேர்தல்கள் செயலகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் நடைபெறவுள்ளது.