கடலில் குளிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் கடல் அலையினுள் மூழ்கி இறந்துள்ள தகவல் அறிந்த பெற்றோர் இருவரும் மரணமடைந்துள்ளனர். துக்கம் தாங்காமலே இவ்விருவரும் மரணமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பட்டியடிச்சேனை கிராமத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த சண்முகம் மற்றும் அவரது மனைவி திருமதி யோகேஸ்வரி சண்முகம் ஆகியோர்களே இவ்வாறு இறந்துள்ளனர். பாசிக்குடா கடலில் நண்பர்களுடன் நேற்று நீராடச் சென்ற ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இரு சகோதரர்கள் காணவில்லையென கல்குடா பொலிசார் தெரிவித்தனர். Read more








