Header image alt text

lanka-philipineபிலிப்பைனஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் வீசா நடைமுறை தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர் பிரிபெஃக்டோ யாசே மற்றும் இலங்கைத் தூதுவர் அருணி ரனராஜ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக, வெளிவிவகார திணைக்களம் கூறியுள்ளது. Read more

election.....உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது கலப்பு தேர்தல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடத்தப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் நிரந்தர பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்குமிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். Read more

ranilஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொண்டு நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பற்றி தொடர்ந்தும் கலந்துரையாட எதிர்வரும் எதிர்வரும் சனிக்கிழமை தான் பிரேசில் நகருக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

frgfgfயுத்தத்தினால் முகத்தில் காயப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து மறைந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவினர், இதனால் அவ்வாறானவர்களுக்கு இலவசமாக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த சத்திர சிகிச்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவின் மாவட்ட ஆளுநர் வைத்திய கலாநிதி வைத்திலிங்கம் தியாகராஜா தெரிவித்துள்ளார். Read more

electric-trainஇலங்கை போக்குவரத்துத் துறையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்த திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார். Read more

cheddiவவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்றுமாலை 6மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பிரதேச செயலகத்தின் மேல்மாடி பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்த 50இற்கும் மேற்பட்ட செட்டிகுளம் பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் அத்துடன் மேல்மாடி பகுதியில் இருந்த சில ஆவனங்கள் எரிந்துள்ளதாகவும் மின்னொழுக்கே இதற்கு காரணமாக இருக்குமெனவும் கூறப்படுகிறது. மேற்படி தீவிபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிகுள பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

raviநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்கவினால் மதுபான நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகையை இரத்துச் செய்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

sdfdஇன்று சர்வதேச பெண் பிள்ளைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகில் உள்ள சுமார் 1.1 பில்லியன் பெண் பிள்ளைகளை வலுப்படுத்தி அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை ஆரம்பித்தது.

பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு பெண் பிள்ளைகள் முகங்கொடுத்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 11 ஆம் திகதி இத்தினத்தை அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டது. இவ்வாண்டிற்கான தொனிப்பொருளாக “பெண்கள் முன்னேற்றம், இலக்குகளின் முன்னேற்றம், ஒரு உலகளாவிய பெண் தரவு இயக்கம்” அமைந்துள்ளது. Read more

doctroஅம்பன்பொல வாகன விபத்தில் வவுனியா டாக்டர் திருமதி கௌரிதேவி நந்தகுமாரும் அவரது பெறாமகளும் மரணமடைந்துள்ளனர்.

மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகள் ஒருவரும் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். Read more

palitha-fernandoபிணையில் விடுவிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, எதிர்வரும் 24ஆம் திகதி முதல் நவம்பர் 4ஆம் திகதி வரை கட்டாரில் நடைபெறவுள்ள மெய்வல்லுநர் சம்மேளனக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

அவன்ற்கார்ட் மெரிடைம் நிறுவனத்திடமிருந்து 335 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், அவருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது. Read more