Header image alt text

indian-shipஇந்திய கடலோரக் காவல்படையின் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான, சமுத்ர பகீரெடர், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று இந்த கப்பல் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளின் கடலோரக் காவல் படைகளுக்கும் இடையில், பரஸ்பர புரிந்துணர்வையும், உறவுகளையும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இந்தக் கப்பல் கொழும்பு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. Read more

japanஇலங்கைக்கு ஜப்பான் அரசாங்கம் 33 பில்லியன் யென் பெறுமதியான கடனை வழங்கியுள்ளது. இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும் தற்போது முன்னெடுக்கப்படும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்குமென இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

10 பில்லியன் யென், அபிவிருத்தி திட்டங்களுக்கான கடனாக வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. Read more

sdfdfdfஇலங்கையில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய ஒன்றாக அமையும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவிட்ஸர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க்வெல்டர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சுவிட்ஸர்லாந்தில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில், இலங்கை விடயத்தில் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகவும் சுவிஸ் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். Read more

arrest (9)மணற்காட்டுப் பகுதியில் இன்று 12.1 கிலோகிராம் கஞ்சாவுடன் 32வயதுடைய சந்தேகநபர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், கஞ்சாவை கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் மணற்காட்டுப் பகுதியில் நின்றிருந்தபோது, கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

ravirajமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பான வழக்கை ஜூரிகள் சபை முன்னிலையில் விசாரிப்பதற்கு அவரது உறவினர்கள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற பிரதம நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் இன்று இடம்பெற்றபோதே அடிப்படை ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

dsssபதுளை நகரின் அருகில் காணப்படும் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் காணப்படும் 40 வருடகால பழமையான குப்பை மேட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட இந்த தீ விபத்தால் பதுளை நகரம் முழுதும் புகைமண்டல் சூழ்ந்தது. Read more

fireதிருகோணமலை மூதூர் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் உயிரிழந்தவர் 25 வயதான பெண் மற்றும் 32 வயதான ஆண் ஒருவரும் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, உயிரிழந்த இருவருக்கும் இடையில் தவறான தொடர்பிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. Read more

udayaஅவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை போலி ஆவணங்கள் ஊடாக (fraudulent Power of Attorney) விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்து நீதிபதி பத்மினி எம்.ரணவக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

eravurமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஹிதாயத் நகரிலுள்ள காணியொன்றிலிருந்து கைக்குண்டுகள் இரண்டை, இன்று மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிதாயத் நகரிலுள்ள செய்யது இப்றாஹிம் ஹமிர் முஹம்மத் என்பவரின் காணியிலிருந்தே இந்தக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர், தனது காணியைத் துப்பரவு செய்து வேலி அமைத்துக் கொண்டிருந்தபோது, இந்தக் குண்டுகள் மண்ணுக்குள் தென்பட்டுள்ளன. Read more

மரண அறிவித்தல்-

Posted by plotenewseditor on 10 October 2016
Posted in செய்திகள் 

jeyam-photo

தோழர். வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன் (ஜெயம்)

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் ஈஸ்த்ஹாம் நகரை வாழ்விடமாகவும் கொண்ட திரு. வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன் (ஜெயம்) அவர்கள் (09.10.2016) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

1980களின் ஆரம்பங்களில் இருந்தே கழகத்தின் லண்டன் கிளை உறுப்பினராக செயலாற்றிய அவர் பின் லண்டன் கிளையின் அமைப்பாளராக இருந்தார். அண்மையில் நடைபெற்ற கழக மாநாட்டில் அவர் கழகத்தின் செயற்குழு அங்கத்தவராக தெரிசெய்யப்பட்டிருந்தார்.

தமிழ் மக்களின் விடிவிற்காக மிகவும் ஆர்வமாகவும், மிகக் கடுமையாகவும் உழைத்த அவர், யுத்தத்திற்கு பின்னரும்கூட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் மிகுந்த ஆர்வத்தோடும், அர்ப்பணிப்போடும் செயற்பட்டு வந்தார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை (DPLF)