Header image alt text

sssஎங்களுக்கு சம்பள உயர்வை வழங்காது இழுத்தடிக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்வரும் காலத்தில் நல்ல பாடம் புகட்டுவோம் என்று, லிந்துலை நகரை சுற்றி வலைத்த எட்டுக்கும் மேற்பட்ட தோட்ட பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

இன்றுகாலை இடம்பெற்ற இப் போராட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் இராஜாதுரையின் உருவ பொம்மை ஒன்றுக்கு பாதணி மாலையிட்டு தொழிலாளர்கள் தூக்கிவந்து எரியூட்டினர்.
Read more

gotabaya......முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. எவன்காட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலைக்கு அனுமதியளித்ததாக குற்றம்சாட்டப்பட்டு இவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், சீனாவில் இடம்பெறும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள, தனது கட்சிக்காரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கோட்டாபயவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். Read more

???????????????

லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தினால் முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தின் பயனாளிகளுக்கு 1,000,000 ரூபா பெறுமதியான 37 துவிச்சக்கரவண்டிகள் 118 குடும்பங்களுக்கு உடுபுடவைகள் மற்றும் 108 குடும்பங்களுக்க உலர் உணவு பொதிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன

ஓம் சற்குரு சிறி சரவணபாபா சுவாமி அவர்களின் 37 வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க பிரிவில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெண்தலைமைத்துவ 1851 குடும்பங்களை கொண்ட அமைப்பாக அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் ஒன்றியத்தை சேர்ந்த தெரிவு செய்யபட்ட பயனாளிகளுக்கு இனிய வாழ்வு இல்ல மண்டபத்தில் வைத்து இவ் அறக்கொடை நிகழ்வு 01.10.2016 அன்று நடைபெற்றது. இவ் நிகழ்வின் போது பயனாளிகள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். Read more

maithri & ranilஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளனர். எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியினுள் இவர்களது விஜயம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியும், பிரதமரும் இந்தியாவின் விருந்தினர்களாக செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே சமயத்தில் அண்டை நாடான இந்தியாவுக்கு செல்வது மிகவும் அரிதான விடயம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களான ராஜ்நாத்சிங், சுஸ்மா சுவ்ராஜ், நிடிஸ் கட்காரி உட்பட பல உயர்மட்ட தரப்பினர்களை சந்திக்க உள்ளனர். Read more

all-ceylon-hindu-congressஇனவாதத்தைத் தூண்டும் வகையிலான பிரசாரங்களை உடன் நிறுத்துமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.

வடமாகாண முதலமைச்சர் ”எழுக தமிழ்” பேரணியில் ஆற்றிய உரையை தவறாக எடுத்துக்காட்டி தெற்கிலுள்ள அரசியல்வாதிகளும் மதத்தலைவர்களும் இனத்துவேச அறிக்கை விடுப்பதையிட்டு அகில இலங்கை இந்து மாமன்றம் கவலையை வெளியிட்டுள்ளது. ஏனைய இனங்களுக்கும் மதங்களுக்கும் எதிராக தான் செயற்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையிலும், அவரை ஒரு இனவாதியாக இழிவுபடுத்துவதற்கு சிலர் முயற்சிப்பதாக மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more

stalinநாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் இம் மாதம் 5ம் திகதி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவொரு சலுகைகளும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

fb_img_1475311775076வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் இன்றுகாலை (01.10.2016) 9.30 மணியளவில் சிறுவர்களை மகிழ்வித்து வாழ்த்தும் அவர்களின் உரிமைக்கான சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் முன்பள்ளியின் அதிபர் திருமதி. மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.சுந்தரலிங்கம் காண்டீபன் (திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளரும் வவுனியா மாவட்ட சாரணிய உதவி ஆணையாளர்) கலந்து சிறப்பித்திருந்தார். இந் நிகழ்விற்கு புளொட் அமைப்பின் பிரித்தானியா கிளை உறுப்பினர் திரு.தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் நிதி அனுசரணை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read more

newzealandநியூசிலாந்தின் உயர்ஸ்தானிகரகம் ஒன்றை இலங்கையில் நிறுவுவதற்கு தீர்மானிக்கவுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார்.

நியூசிலாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு இன்று நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்போதே நியூசிலாந்து பிரதமர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். Read more

rukki-fernandoமனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ குற்ற புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பாக வெளிநாட்டில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளவென வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தபோதே மனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

swordயாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் நேற்றிரவு சகோதரர் இருவர் உட்பட மூவர்மீது கும்பலொன்று மேற்கொண்ட வாள்வெட்டில், மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலில் இராசாவின் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சகோதரர் இருவர் உட்பட மூவரும் படுகாயமடைந்துள்ளார். ஸ்ரான்லி வீதியில் உள்ள கடையொன்றின் முன்பாக நின்று உரையாடிக்கொண்டிருந்த சமயம் மூன்று மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த குழு இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. Read more