ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மீதமிருந்த இரண்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த உத்தரவினை அவிசாவளை நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. பிரகீத் எக்னெலிகொட வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேக நபர்கள் இதற்கு முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.