nandana-udawaththaஇலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் இழைத்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

இறுதிக்கட்டப் போரில், மணலாறில் இருந்து முல்லைத்தீவு நோக்கி நகர்ந்த இராணுவத்தின் 59ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர் மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த. இறுதிக்கட்டப் போரில் வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகளில் ஒருவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் இவர். 55 வயதை எட்டிய மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை நேற்றுடன் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றார். ஓய்வுபெறும் போது, கவசப்படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக இருந்த இவருக்கு, கொழும்பு றொக் ஹவுசில் உள்ள இராணுவ கவசப்படைப்பிரிவு தலைமையகத்தில், நேற்று பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.