கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 2008ஆம் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படும் நபரொருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பியசேன ரனசிங்க இன்றையதினம் பிறப்பித்துள்ளார். கனகசபை தேவதாசன் என்ற நபருக்கே இவ்வாறு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் பேஸ்போல் அணி வீரர்கள் 8 பேர் உட்பட 12 பேர் உயிரிழந்ததுடன், 92 பேர் காயமடைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.