Header image alt text

fdfdசுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது சேவை தொழிலாளர் சங்க மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு, தெற்கு மகளிர் இணைந்து மன்னாரில் இன்று பாத யாத்திரை நடத்தியுள்ளனர்.

பாத யாத்திரையில் கலந்து கொள்ளுவதற்காக தென்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மகளிர் வந்திருந்தனர். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இன்று முற்பகல் 10 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் ஆரம்பமான பாத யாத்திரை பிரதான வீதியூடாக சென்று மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ssகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று 21வது நாளாகவும் தொடர்ந்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டமானது இன்றுடன் 21ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

sfd (2)தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி, போராட்டத்தை முன்னெடுத்துவரும் கேப்பாப்புலவு மக்களை கண்காணிப்பதற்காக நவீன கமெரா ஒன்று இரகசியமாகப் பொருத்தப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை, கோவில்கள், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்டவை மற்றும் தமது பொருளாதார வளமும், இராணுவத்தால் கையகப்படுத்தபட்டுள்ளதாக அந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கேப்பாப்புலவு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பிலவுக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை, போராட்டம் மூலம் மக்கள் பெற்றுக்கொண்டனர். இந்நிலையிலேயே கேப்பாப்புலவு மக்கள், தமது பூர்வீக நிலத்தை மீட்கும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். Read more

17203898_1262727527095751_877810216_nவவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று முன்தினம் காலை 10மணியளவில் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து நேற்றையதினம் புதிதாக நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இவ் பொதுகூட்டத்திற்கு வவுனியா பிரதேச செயலாளர் திரு. உதயராஜா, நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச கலாசார உத்தியோகத்தர், வவுனியா மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திரு.அபேயசிங்க, திரு.சுகானி, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கேசவன், இளைஞர் சேவை அதிகாரிகளான ரதித்திரா, திரு.சசிக்குமார், மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் திரு.கிரிதரன் மற்றும் இளைஞர் கழக பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். Read more

dgfகிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற ரயில் லான்ட்மாஸ்ரர் விபத்தில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரயில் கடவையை லான்ட்மாஸ்ரர் கடப்பதற்கு முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் ஒரு வாரத்துக்குள் நடைபெற்ற இரண்டாவது விபத்து இதுவாகும். விபத்து இடம்பெற்றபோது சமிக்ஞை விளக்கு சரியான முறையில் ஒளிரவில்லை என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

sfdதோட்ட சேவையாளர்களின் சம்பள உயர்வில் முதலாளிமார் சம்மேளம் அசமந்தப் போக்கை கடைபிடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்ட சேவையாளர்கள் இன்று பாரிய கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

தோட்ட சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் பஸ் தரிப்பிடத்திலிருந்து நகரின் பிரதான வீதியூடாக மணிக்கூடு சந்திவரை பேரணியாக சென்று மணிக்கூண்டு சந்தியில் மேற்படி ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தோட்ட சேவையாளர்களுக்கான சம்பள உடன்படிக்கை நிறைவடைந்தும் மூன்று கட்டப் பேச்சுக்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்ற நிலையில் சரியான தீர்வு கிடைக்காததால் பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். Read more

sadqwஅம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ஆம் கட்டை வயல் பிரதேசத்தில், வாடியொன்றின் கீழ், எரியுட்டப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவரின் சடலம், இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலையடிவேம்பு முருகன் கோவில் வீதியில் வசித்து வந்த 23வயதுடைய சங்கர் விஜிதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவரென உறவினர்களால் அடையாளம் காட்;டப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேசன் தொழில் செய்து வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொத்துவிலுக்கு வேலைக்குச் செல்வதாக வீட்டில் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளதாகவும், அதன் பின்னர் எரியுட்டப்பட்ட நிலையில் சடலமாக வயல் பிரதேசத்தில் இவரின் உடல் கிடப்பதாகத் தாம் அறிந்து கொண்டதாகவும், உறவினர்கள் கூறியுள்ளனர். Read more

police ...மட்டக்களப்பு, காத்தான்குடி கர்பலா வீதியில் பெற்றோல் குண்டுகள் இரண்டு, இன்றுகாலை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வீதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக சுத்தம் செய்துகொண்டிருந்த அவ்வீட்டுப் பெண்ணொருவர், பெற்றோல் குண்டுகள் கிடப்பதைக் கண்டு, அவ்விடத்தில் நின்ற பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, காத்தான்குடி பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார், குறித்த பெற்றோல் குண்டுகளை மீட்டுள்ளனர். இது உள்ளுரில் தயாரிக்கப்பட்ட பெற்றோல் குண்டுகள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

sfsவவுனியாவில் கடந்த சில தினங்களில் 22பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அண்மையில் பன்றிக்காய்ச்சல் தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் தொற்று ஏற்பட வாய்புக்கள் அதிகம் உள்ளதால் சிறுவர்களையும், குழந்தைகளையும் தேவையின்றி வைத்தியசாலையில் தங்கியுள்ள உறவினர்களைப் பார்வையிட அழைத்துவருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிறுவர்கள் அவதானமாக இருக்குமாறும், Read more

qwerqweqகேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த கிராமத்தையும் தமது சொத்துக்களான காணிகள் மற்றும் குடியிருந்த வீடுகள் என்பனவற்றையும் கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 11 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவ தலைமையக வாயில் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பதினொரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு தமது சொந்த நில விடுவிப்பு தொடர்பில் சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் இன்று முதல் குறித்த கிராமத்தை சேர்ந்தச் இளைஞர் மற்றும் முதியவர் இணைந்து 2பேர் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை படைத்தலைமையக வாயில் முன்பாக முன்னெடுத்துள்ளனர். தமது சொந்த நிலங்களில் ஆக்கிரமித்துள்ள படையினர் அதிலுள்ள வளங்கள் அனைத்தையும் தாம் அனுபவித்துக்கொண்டு வாழ்வதாகவும் தம்மை தமது சொந்தநிலங்களில் குடியமரவிடாது தமது கிராமத்துக்கு ஊடாக செல்லும் பிரதான வீதியை கூட மறித்து பாரிய கதவு ஒன்றினை அமைத்துள்ளனர். Read more