Header image alt text

 

vanni01 vanni02வவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சிஇ அரசுக்கூட்டுச்சதியை முறியடிப்போம்’ எனும் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் தாங்கி சுவரொட்டிகள் வன்னி மக்கள் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

jaffna universityயாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கண்டன அறிக்கை Read more

northjaffnaவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை வளாகத்துக்கு முன்னால் தற்போது கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம், பொது அமைப்புக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலதரப்பினர் கலந்து கொண்டுள்ளனர். Read more

D.sithadthan MPவடமாகாண சபையின் தற்போதைய நிலை அங்கத்தவர்கள் சுயாதீனமாக முடிவெடுங்கள்

அங்கத்தவர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கலாம் என நாம் விட்டுள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். Read more

Gajendrakumar-Ponnambalamதமிழ் மக்களின் தேசிய கொள்கையுடன் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசு கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். Read more

northவட மாகாண அமைச்சர்களில் இருவரை ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலக உத்தரவிட்டு, ஏனைய இருவருக்கும் எதிராக விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்ய தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளது. Read more

northவடமாகாண சபையின் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் உட்பட சிலரும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அத்துடன் வடமாகாண முதலமைச்சர் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நியாயம் கேட்காமல் தன்னிச்சையாக அவர்களுக்கு கட்டாய விடுமுறையை வழங்கியிருந்தார். Read more

vikiவட மாகாண அமைச்சர்களான ரி. குருகுலராசா மற்றும் பொன். ஐங்கரநேசன் ஆகியோரை தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து சுயமாக விலக வேண்டும். இரண்டு அமைச்சர்களினதும் இராஜினாமாக் கடிதங்களையும் நாளை மதியத்திற்கிடையில் எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more

ingaranமுதலமைச்சர் கூறினால் பதவி விலகுவேன் சிறப்பு அமர்வில் ஐங்கரநேசனின் தன்னிலை விளக்கம்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக வடக்கு மாகாண சபை இன்று கூடியுள்ளது.

வடமாகாண சபையின் 96ஆவது சிறப்பு அமர்வு, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கூடியுள்ளது Read more

tower இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மேற்கு பகுதியில் உள்ள 27 மாடிகள் கொண்ட கிரென்பெல் டவரில் கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் பிடித்த தீ கட்டிடம் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரியும் நிலையில் தீயை அணைக்கும் பணியில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 200 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்துவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேல் தளத்திலிருந்து 2வது தளத்தில் தீ பற்றியிருக்கிறது. அது மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அந்தக் கட்டிடத்தில் 120 பிளாட்டுகள் உள்ளன.  Read more