உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு கடவுச்சீட்டு பெற்றுள்ளது. இந்த கடவுச்சீட்டு மூலம் விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும்.
சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின் கடவுச்சீட்டுகள் குறித்த தரவரிசையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விசா இன்றி பயணம் செய்ய அனுமதிப்பதன் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சிங்கப்பூர் 159 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. Read more








