இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின்போதும், எனைய எந்த பூசைகளின்போதும் மிருகங்களை பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இத் தடை உத்தரவினை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும் அது தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து குற்றமிழைத்தவரை கைதுசெய்து அருகிலுள்ள நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். Read more
		    







