Header image alt text

Vkவடமாகாண சபையில் மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.வடமாகாணசபையின் 110வது அமர்வு இன்று யாழ் கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. Read more

reginold-kureவடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே விளக்கம் கோரியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விளக்கமளிக்குமாறு ஆளுனர் இன்று கடிதம் மூலம் கோரியுள்ளார். Read more

sarvesகடந்த சில நாட்களாக தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் சிலரும், ஊடகங்களும் தேசிய கொடி விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவ்விடயத்தை அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் பற்றிப் பேசுவதைவிட, என்மீது சட்ட நடவடிக்கையை பிரதானப்படுத்துவதானது இவ்விடயத்தினை குறுகிய அரசியல் இலாபங்களுக்காக திசைதிருப்பி பூதாகாரப் படுத்துகின்ற போக்காகவே நோக்கமுடிகின்றது. எனவே இந்த விடயத்தில் வெளிவருகின்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து எனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. Read more

radcoமுன்னாள் போஸ்னிய செர்பிய இராணுவ தளபதி ராட்கோ மிலாடிச், 1990ஆம் ஆண்டு நடைபெற்ற போஸ்னிய போரின்போது இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
Read more

mavaiதமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ள கருத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ஆனால், தமிழ் மக்கள் ஒற்றுமைக்காக, கட்சிகளுக்கு அப்பால், எமது மக்களின்; கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும், மண்ணின் விடுதலைக்காகவும், மக்களின் விடுதலைக்காகவும், தமிழ் மக்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டியது மிக முக்கியமானது. Read more

mukaஜிம்பாப்வேயில் நீண்டகாலம் அதிபராக இருந்த ராபர்ட் முகாபேவினால் துணை அதிபர் பதவியில் இருந்து இருவாரங்கள் முன்பு நீக்கப்பட்ட எமர்சன் முனங்காக்வா, அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்கக்கூடும் என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளது. Read more

maram02வட மாகாண விவசாய அமைச்சின் மர நடுகை மாதத்தை முன்னிட்டு 21/11/2017 பரசன்குளம் லைக்கா கிராமம் மற்றும் நெடுங்கேணி மருதோடை ஆகிய பிரதேசத்தில் மர நடுகை நிகழ்வு இடவட மாகாண விவசாய அமைச்சின் மர நடுகை மாதத்தை முன்னிட்டு 21/11/2017 இன்று பரசன்குளம் லைக்கா கிராமம் மற்றும் நெடுங்கேணி மருதோடை ஆகிய பிரதேசத்தில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. Read more

vote18 வயது பூர்த்தியான இளைஞர்களுக்கு தாமதமின்றி வாக்களிக்கும் உரிமையை வழங்க ஏதுவாக, துணை வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

1980ம் ஆண்டு 44ம் இலக்க வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 01ம் திகதி 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள முடியும். Read more

vivasayam 01கண்டாவளை கமநல சேவை நிலையத்தில் ONUR திட்டந்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு வர்த்தகரீதியான உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்குதலும் மற்றும் கிணறுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் மற்றும் பிரதி விவசாயப் பணிப்பாளர் உலகநாதன் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர் (விவசாயம் ) மற்றும் விவசாய போதனாசிரியர்கள் மற்றும் பிரதேச செயலக பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர். Read more

schoolடயகம பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா கல்வி வலயத்தின் மேற்கு பிரிவு இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட, பிரதேசவாசிகள் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரை கல்வி பயிலும் 42 ஆண், பெண் மாணவர்கள் இன்று டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஏனையவர்கள் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more