Header image alt text

வேதன முரண்பாட்டிற்கு தீர்வு காணுமாறு கோரி சுங்க அதிகாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கொழும்பில் அமைந்துள்ள சுங்க தலைமையகத்திற்கு முன்னால் இன்று இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

உரிய தீர்வு கிடைக்காவிடின் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் லால் வீரகோண் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டத்தில் இதுவரை மீள்குடியேறிய மக்களில் 15 ஆயிரம் குடும்பங்கள் காணி அற்றவர்களாக பதிவாகி இருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

கடந்த 07 வருடங்களாக இவர்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன் உடுவில் பிரதேச செயலகத்தால் அமைக்கப்பட்ட 30 மாதிரிக் கிராம வீட்டுத்திட்டத்தை, மிகவும் பின்தங்கிய காணியற்ற நிலையிலுள்ள பயனாளிக்கு கையளிக்கும் நிகழ்வு யாழ் புன்னாலைக்கட்டுவான் கிழக்கு பிரதேசத்தில் நேற்று நடைபெற்றது. Read more

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று இந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கை வந்துள்ளார். இதேவேளை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று மதியம் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் சென்றனர். இந்த விஜயத்தின்போது இருதரப்பு சுதந்தர வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ரயில் சாரதிகளும் ரயில் பாதுகாப்பாளர்களும் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள ரயில்களை சேவையில் ஈடுபடுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பில் இன்று பகல் ரயில் பொது முகாமையாளர் உள்ளிட்ட போக்குவரத்து உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் சங்கத்தின் தலைவர் இந்திக்க தொடங்கொட குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கோட்டைக்காடு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான லட்சுமிகாந்தன், லோகராஜன், தர்சன் ஆகியோருக்கு ஆதரவுகோரி தேர்தல் பரப்புரை கூட்டமொன்று நேற்றையதினம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் வேட்பாளர்களுடன் புளொட் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ் மாநகரசபைக்கான வேட்பாளர் தர்சானந்த் மற்றும் வலி தெற்கு பிரதேசசபைக்கான வேட்பாளர் அபராசுதன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்கினார்கள். Read more

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று அவர் வருகை தருகின்றார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தோனேசிய ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன. Read more

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதி இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதுடன் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கமலவதனா (கமலி) என்ற குடும்பப்பெண்ணே உயிரிழந்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் நேற்றுக்காலை தனது 6வயது மகனுடன் ரயிலிலிருந்து மற்றுமொரு ரயிலிற்கு மாறும்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அவரது பாரியாரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றதுடன், இராணுவ மரியாதை வழங்கப்பட்டுள்ளது. Read more

வவுனியாவில் காணாமல்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 334 ஆவது நாள் நிறைவடைகின்றது.

வவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஒரு வருடமானதை முன்னிட்டு இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை காணாமல்போனோரது உறவுகள் மேற்கொண்டனர். Read more

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆணைக்கோட்டை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கொலை நடைபெற்ற இடத்தில் கண்டெக்கப்பட்ட தடயப்பொருட்கள் தொடர்பிலும் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more