Header image alt text

14699667_1812533855697729_1094427888_oதெற்கில் காலி கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிச்சைப் பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனியென யாழ் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது.

நேற்று(13.10.2016) காலை 5.30மணியளவில் புளியங்குளம் நகரில் ஆரம்பமாகி காலை 7.30 மணியளவில் ஓமந்தை மத்திய கல்லூரியை அடைந்தது. இளைஞர் சேவைகள் மன்றத்தின் விளம்பர பதாகை நெடுங்கேணி இளைஞர்களிடம் இருந்து தமிழ் தேசிய இளைஞர் கழகம், ஓமந்தை இளைஞர் கழகம் மற்றும் ஐயனார் விளையாட்டுக் கழகத்தினரால் ஓமந்தையில் பெற்றுக்கொள்ளப்பட்டது. Read more

fgfgfமன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட மூன்று குடும்பங்களுக்கு, அவர்களது தேவை கருதி வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக வலைகள் அடங்கலான ஒவ்வொன்றும் சுமார் 20,000 ரூபாய் பெறுமதியான உள்ளீடுகளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் அவர்கள் தனது 2016ஆம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து இவற்றுக்கென ஒதுக்கீடு செய்து, வடக்கு மீன்பிடி அமைச்சினூடாக இவை கொள்வனவு செய்யப்பட்டன. Read more

missingகிளிநொச்சி நகரில் நேற்றுமுன்தினம் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் இளம் குடும்பஸ்தர் கிட்ணசாமி ரதீஸனின் மனைவி சர்மிளா ரதீஸன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

யாழ்ப்பாணம் – இடைக்குறிச்சி – வரணியை சேர்ந்த 35 வயதுடைய வர்த்தகரான கி.ரதீஸன் கிளிநொச்சி நகரில் வைத்து நேற்று முன்தினம் நண்பகல் இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. குறித்த வர்த்தகர் தனது வீட்டில் இருந்து கிளிநொச்சியில் உள்ள அவரது அச்சகத்திற்கு சென்றநிலையிலேயே கடத்தல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. Read more

sdssசீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பீஜிங்கில் கடந்த 11ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக சீன பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. ஏழாவது ஷியாங்சான் பாதுகாப்புக் கருத்தரங்கின் பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. Read more

hhhhவவுனியா மூன்றுமுறிப்பு தச்சன்குளம் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று பகல் வவுனியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா, தச்சன்குளம் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றை அதன் உரிமையாளர் நீர் இறைத்து துப்புரவு செய்தபோது, கிணற்றுக்குள் இருந்து இரு தகரப் பெட்டிகளை மீட்டுள்ளார். குறித்த தகரப் பெட்டிகளில் வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டு வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். Read more

vipulananda-2வவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை அன்றுகாலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டம் கல்லூரியின் அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், காலை 9 மணிமுதல் பழைய மாணவர்கள் தங்கள் பதிவு மற்றும் அங்கத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபைத் தெரிவும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

policeயாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஐ.எம். பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.

2011ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்தபோது தப்பிச்சென்ற சந்தேகநபரின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். Read more

vigneswaranவட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள 84 அதிபர்களின் நியமனங்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இரத்து செய்துள்ளார்.

வட மாகாண கல்வி அமைச்சின் ஆலோசனைக்கு இணங்கவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

east-campust-trincoகிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 04 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் விடுதியில் முன்னெடுக்கப்பட்ட சுத்திகரிப்பின்போது முதலாம் வருட மாணவர்களுக்கும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் நேற்றுமாலை மோதல் இடம்பெற்றுள்ளது. Read more

police-stationவவுனியா ஈச்சக்குளம் புதிய பொலிஸ் நிலையம் மற்றும் போகஸ்வௌ புதிய பொலிஸ் நிலையம் என்பன நாளை திறந்துவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஈச்சங்குளம் புதிய பொலிஸ் நிலையம் நாளை காலை 8.30 மணிக்கும் போகஸ்வௌ புதிய பொலிஸ் நிலையம் முற்பகல் 11மணிக்கும் திறந்துவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இந்த பொலிஸ் நிலையங்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் திறந்துவைக்கபடவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.