Header image alt text

NPCவடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனின் இறுதிக்கிரியைகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் பொருட்டு, வடமாகாண சபையின் அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று ஆரம்பமானது. இதன்போது, அன்டனி ஜெகநாதனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. Read more

nimal-leukeவிசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான, ஓய்வுப்பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிமல் லெவிகே,

ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

srilanka-swissஇலங்கை சுவிஸர்லாந்துக்கு இடையில் இருதரப்பு குடியேற்ற ஒப்பந்தம்கை ச்சாத்திடப்பட்டுள்ளது.

சுவிஸர்லாந்தின் நீதி அமைச்சர் சிமோட்டா சொமாரொஹா மற்றும் இலங்கையின் உள்துறை அமைச்சர் செனவிரத்ன பண்டார நாவின்ன ஆகியோருக்கு இடையில் குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சுமார் 50,000 இலங்கையர்கள் சுவிஸர்லாந்தில் புகழிடம் பெற்றுள்ளனர். Read more

india-metஇந்தியாவிற்கான உத்தியோகபூர்வ் விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

அத்துடன், உடல்நலக்குறைவால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் இன்று ரணில் சந்தித்துப் பேசியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, வாராணாசியில் கடந்த ஆகஸ்ட் 2-ம் திகதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அன்றைய தினமே திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். Read more

flightபுதிய A320 NEO வகை விமானங்கள் ஐந்து இலங்கை விமான சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக, சிறீலங்கன் எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.

குத்தகைக்கு பெறப்படும் குறித்த விமானங்கள் 2017ம் ஆண்டு முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதேவேளை, நவம்பர் முதல் லண்டனுக்கான விமான வேவையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. இதன்படி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் லண்டனுக்கான விமான போக்குவரத்துக்களை ஒரு வாரத்துக்கு ஒன்பதாக அதிகரிக்கவுள்ளதாகவும் சிறீலங்கன் எயார் லைன்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. Read more

sfddமுதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டம் இன்று 10வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பொகவந்தலாவ, கொட்டியாகலை, டின்சின் கெம்பியன் ஆகிய தோட்டங்களை சேர்ந்த 2500கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து பேரணியாக சென்றுள்ளனர். Read more

jeyantha-weerawansaவிமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆகியோர் எதிர்வரும் 10ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

former-navy-commanderமுன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜாராகியுள்ளார். இவர் இன்றுகாலை குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்தார்.

கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணமல் போனதாக கூறப்படும் 11 இளைஞர்கள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

sri-lanka-south-koreaஇலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தினை தென்கொரிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் வீ சேங்கோ மற்றும் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ருவான் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
Read more

vigneswaranசுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கையர்களை திருப்பி அனுப்புவது, இப்போதைக்கு உசிதமானது இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் சிமோனிற்றா சோமறுகா, தமது விஜயத்துக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது,
Read more