ceylon-human-right-commisionமனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கையில் சித்திரவதைகள் மற்றும் கொடுமையான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு எதிராக, சட்டமா அதிபரும் காவல் துறை மா அதிபரும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

சித்திரவதைகளுக்கு எதிரான தமது ஐந்தாவது மீளாய்வு அறிக்கையிலேயே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. தமக்கு கிடைத்த தகவல்களின்படி கடந்த மே மாதம் வரையில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாத 29 பேர் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சில வழக்குகள் 15 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில் நீதித்துறையில் தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்களின் வெற்றிடம் மற்றும் காவல்துறை நிலையங்களில் ஏற்பட்டுள்ள தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்களின் வெற்றிடங்கள் என்பன சட்ட ஏற்பாடுகளை பாதித்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தடுப்பில் இருந்து மரணமானவர்கள் பலர் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது மீளாய்வு அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது.