accidentஇலங்கையில் இவ்வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் மாத்திரம் வாகன விபத்தினால் 2200 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் குறித்த வாகன விபத்துக்களினால் அதிகளவிலான பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற பாதுகாப்பு கடவை, அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தியமை, வீதி ஒழுங்கு முறைமை களை கடைப்பிடிக்காமை போன்றன காரணமாகவே அதிக வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. அதேநேரம், இவ்வருடம் இடம்பெற்ற விபத்துக்களில் ரயில் விபத்துக்கள் கணிசமான அளவு அதிகரிப்பை காட்டுகின்றன. இதற்கான சிறந்த உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறந்த நாள் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற யுவதிகள் இருவர் பாடல்களை கேட்டுச் சென்றுள்ள நிலையில் ரயிலில் மோதுண்டு தூக்கி எறியப்பட்டு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது மாத்தறை பகுதியில் இளைஞர் ஒருவர் அதிவேக ரயில் ஒன்று எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருந்தவேளை ரயிலின் முன்பாகச் சென்று தண்டவாளத்தில் தனது கழுத்தை வைத்து தற்கொலை செய்துகொண்டிருந்தார். இவ்வாறான ரயில் விபத்துக்கள் இவ்வருடத்தில் கணிசமான அளவு இடம்பெற்றதில் அதிகளவான இளம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.