Header image alt text

swordயாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயப் பகுதியில் நத்தார் தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வீச்சில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றுமாலை இடம்பெற்ற வாள்வீச்சு சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தரான கிறிஸ்தோபர் பிரனீத், நவாலியைச் சேர்ந்த இளைஞரான வின்சன், ஆட்டோ சாரதியான சாய்மாறன் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் நத்தார் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றிருந்த வேளை அங்கு வாள், கத்தி மற்றும் கொட்டன்களுடன் வந்த ஆயுததாரிகளே சரமாரியான வாள் வீச்சை அங்கு நின்றிருந்தவர்கள் மீது நடத்தியிருந்தனர். Read more

dsfsdfsdஇலங்கைப் பத்திரிகையாளர் நிறுவனத்தின் அடுத்த இரண்டு வருட நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக நோர்வே அரசு 10.5 மில்லியன் ரூபா தொகையை வழங்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இலங்கைக்கான நோர்வே தூதுவர் இலங்கைப் பத்திரிகையாளர் நிறுவனத் தலைவர் குமார் நடேசன் ஆகிய இருவராலும் சமீபத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் சங்கம் உட்பட பல அமைப்புகளால் நிர்வாகிக்கப்படும் இந்த இலங்கைப் பத்திரிகையாளர் நிறுவனத்திற்கு நோர்வே அரசை விட சுவீடன், டென்மார்க் அரசுகள், அமெரிக்க, பிரித்தானிய அரசுகள், யுனெஸ்கோ அமைப்பு என்பன நீண்ட காலமாக நிதி உதவி அளித்து வருகின்றன. Read more

pujitha jayasundaraஊடகங்களுக்கு செய்தி வழங்குவது தொடர்பில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கவில்லையென பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஊடகங்களுக்கு செய்தி வழங்குவது தொடர்பில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு எந்தவித ஏற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லையெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் தனியார் ஊடகங்களுக்கு செய்தி வழங்குவதற்கு கட்டுப்பாடுகளை கொண்டுவரவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

jafயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள ரெலிக்கொம் கோபுரம் சரிந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் இன்றுமாலை 3.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த நேரம் வீதியால் சென்ற பெண் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது. கடந்த ஒருவாரமாக இந்த கோபுரத்தில் திருத்தவேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இன்றைய தினமும் திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மதிய உணவுக்காக திருத்தவேலைகள் மேற்கொண்ட நபர்கள் சென்றபின்னர் குறித்த கோபுரம் சரிந்து விழுந்துள்ளது. Read more

abilash“சுனாமி பேபி 81“என்று அழைக்கப்படும் அபிலாஷின் கல்விச் செலவை விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினர் பொறுப்பெடுத்துள்ளனர்.

ஆழிப் பேரலையின்போது ஒன்பது தாய்மார்கள் உரிமை கோரிய சுனாமி பேபி 81 என்று அழைக்கப்படும் அபிலாஷின் கல்விச் செலவை விருட்சம் சமூக மேம்பாட்டு அமைப்பினர் சுனாமி இடம்பெற்று 12ஆவது ஆண்டு நினைவு நாளான இன்றிலிருந்து பொறுப்பெடுத்துள்ளனர். கல்முனை குருக்கள் மடத்தில் அமைந்துள்ள ஜெயராசா அபிலாஷின் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வில், ஜெயராசா அபிலாஷ_க்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. Read more

dffdதொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புபுரஸ்ஸ கிராம சேவகர் பிரிவு டெல்டா வடக்கு (டேசன் தோட்டம்) 7ம் நம்பர் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 5 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்று முற்றாக சேதமாகியுள்ளது. 

இன்று காலை 11.00 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ, வீடொன்றில் இருந்து பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கான காரணம் மின்சார கசிவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலும், அப் பகுதி மக்களின் உதவியால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, குறிப்பிட்ட சில வீடுகளில் இருந்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. Read more


img_0382
முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனையின் புகழ் பூத்த முதுபெரும் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு 23.12.2016 வெள்ளிக்கிழமை மாலை 2.00 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து வன்னி மேம்பாட்டுப்பேரவை மற்றும் கலாசாரப் பேரவையின் அனுசரணையில் தமிழ் கலாசார மன்றத்தின் (சுக்காட் ஜேர்மனி) நிதிப்பங்களிப்புடன் சிறப்புற நடைபெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், பிரதேச செயலாளர் குணபாலன் வன்னி மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் க. தவராஜா, இணைத்தலைவர் கமலகாந்தன் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

former-ltteவவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். நெடுங்கேணி குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஸரிபன் (36 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை மாலை புளியங்குளம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, திடீரென மயக்கம் ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த இவர், புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read more

russia-flightசுமார் 92 பயணிகளுடன் காணாமற்போன ரஷ்ய விமானம் கருங்கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறித்த விமான பயணத்தை ஆரம்பித்து 20 நிமிடங்களின் பின்னர் விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. விமானம் உடைந்து வீழ்ந்தபோது அதில், இராணுவ வீரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 91பேர் இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

housing schmeகிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் பதினையாயிரத்து 370வரையான புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களினூடாக நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

எனினும் மேலும் பதினையாயிரத்து 370 வரையான குடும்பங்கள் நிரந்தரவீடுகள் இன்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில், இதுவரை பல்வேறு திட்டங்களினூடாக இருபத்தி ஆறாயிரத்து 261 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டும் நிர்மானம் செய்யப்பட்டுக்கொண்டும் இருக்கின்றதாகவும் அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.