Header image alt text

usa sriஇலங்கையில் நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஏற்படுத்த தம்மால் இயன்ற ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. Read more

ganjaயாழில் இருந்து கொழும்பிற்கு சென்றுகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் இரண்டு கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் கேரள கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கிளிநொச்சிப் பொலிசாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கமைய கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, கிளிநொச்சி பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினரால் குறித்த பேருந்து வழிமறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. Read more

denkuஇலங்கையில் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று புதன்கிழமை தொடங்கி அனைத்து பள்ளிகளும் மூன்று நாட்கள் மூடப்பட்டுள்ளன.

பள்ளிக் கூட ஆசிரியர்களும் மாணவர்களும் இந் நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வரவிலும் வீழ்ச்சி காணப்பட்டுள்ளதையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. Read more

northern_provincial_council1ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015ம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் ஒப்புதல் வழங்கி நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பான பிரேரணை வடமாகாணசபையின் விசேட அமர்வில் கடுமையான வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more

Panneerஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் பிரச்சினை தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷ;ன் அதிகாரிகளை ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசினார். அப்போது இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இரட்டை இலை சின்னம் பிரச்சினை தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷ;னர் நஜீம் ஜைதியை சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் டெல்லி புறப்பட்டு சென்றனர். Read more

R.Kமுதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து, காலியான சென்னை டாக்டர் ராதாகிருஷ;ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என்று அக் கட்சியின் பொதுச் செயலர் சசிகலாவின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திமுக வேட்பாளராக என். மருது கணேஷ; போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

sssபிரிட்டனின் ஓர் அங்கமாக உள்ள ஸ்காட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. இது தொடர்பாக 2014-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், ஸ்கொட்லாந்து, பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து 55 சதவீத மக்கள் வாக்களித்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக செயல்படும் வகையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஸ்கொட்லாந்து முடிவு செய்துள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் அனுமதி கேட்கப்படும் என முதல் மந்திரி நிகோலா ஸ்டர்ஜியான் கூறியுள்ளார். பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால், இந்த ஆண்டின் பிற்பாதியிலும் அடுத்த ஆண்டு முதல் பாதியிலும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு விரும்புகிறார் நிகோலா. Read more

genevaஇலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும், மனித உரிமைகளையும் முன்னேற்றுவதற்கான, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய வரைவுத் தீர்மானத்தின்படி, எதிர்வரும் 2019ஆம் ஆண்டுவரை, இலங்கைக்குக் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மொன்டனீக்ரோ, மசிடோனிய குடியரசு, பெரிய பிரித்தானியா, வட அயர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் பிரதான அனுசரணை வழங்கியுள்ள இந்த வரைவுத் தீர்மானம், மனித உரிமைகள் பேரவையில், நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, 2015ஆம் ஆண்டில், இலங்கையின் இணை அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்பட்ட 30/1 என்ற தீர்மானத்தை அமுல்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவுகளை வரவேற்றுள்ள அந்த வரைவு, மேலும் கணிசமானளவு முன்னேற்றம் தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. Read more

ssfதிருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு மயானத்தில் உள்ள புதைகுழிகளில் ஒன்று தோண்டப்பட்டபோது, அதிலிருந்து சிசுவுக்கு அணிவிக்கின்ற மேலாடையொன்றும் உள்ளாடையொன்றும், சிறு பிள்ளைகளை போர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் போர்வையும் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சந்தேகத்துக்கு இடமான அந்த புதைக்குழியை தோண்டுவதற்கான அனுமதியை, மூதூர் நீதிமன்றத்தில் பொலிஸார் கோரியிருந்தனர். அதற்கமைவாக, மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் அந்தப் புதைகுழி, நேற்று தோண்டப்பட்டது. Read more

arjunபிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் உள்ள குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரிடம் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன வாக்குமூலமளித்து வருகின்றார்.

இவர் இன்று 3ஆவது தடவையாக மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார். இவர் நேற்று மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை போன்ற தினங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆஜராகியமையும் குறிப்பிடத்தக்கது.