Header image alt text

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி வலைகளைக் கைப்பற்றியுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மீன்பிடி வலைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சட்டவிரோத மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன. Read more

இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இலஞ்சமாக பல்வேறு பொருட்களை வழங்கி வருவதாக தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

தேர்தல்கள் ஆணையம் இதனுடன் தொடர்புடைய அறிவித்தல்களை எவ்வளவு தூரம் மேற்கொண்டாலும், அந்த சட்டங்கள் வேட்பாளர்களால் மீறப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். Read more

யாழ்ப்பாணத்தில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ். நல்லூர் அரசடி வீதிப் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் திவானி (வயது 36) பிரதீபன் கஜநிதன் (11) பவநிதன் (வயது 9) அருள்நிதன் (வயது 8) இரட்டைக் குழந்தைகளான யதுசியா, யஸ்ரிகா (வயது 2) ஆகியோரே காணாமல் போயுள்ளனர். இவர்களைக் காணவில்லையென உறவினர்களால், கடந்த 09ம் திகதி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read more

2018 முதல் 2019ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான உதய ரொஹான்டி சில்வா மீண்டும் தெரிவாகியுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற அந்த சங்கத்தின் தேர்தலின் போது எந்தவொரு போட்டியாளரும் முன்னிலையாகத காரணத்தினால் போட்டியின்றி முன்னாள் தலைவர் மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். Read more

சிறுவர் உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு, இலங்கையில் சிறார்களுக்கு நிலவும் மனித உரிமைகளின் நிலவரங்கள் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளது. ஜெனீவாவில் இந்த மாதம் 15ம் மற்றும் 16ம் திகதிகளில் இந்த ஆய்வு நடைபெறவுள்ளது. மனித உரிமைகள் பேரவை இதனைத் தெரிவித்துள்ளது.

18 சுயாதீன நிபுணர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களைக் கொண்டதாக இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தை எந்த வகையில் நாடுகள் அமுலாக்கியுள்ளன என்ற அடிப்படையில், இந்த ஆய்வு இடம்பெறும். Read more

மாலியில் சகஜ நிலையை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஐ.நா.வின் பாதுகாப்புப் படையில் இணைந்துகொள்ளும் முகமாக, இலங்கை இராணுவ வீராங்கனைகள் 18 பேர் நேற்று மாலி நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இதே பணியில் ஈடுபடும் முகமாக, கடந்த 24ஆம் திகதி இராணுவவீரர்கள் 150பேர் அடங்கிய குழுவொன்று அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மாலியில் உள்ள ஐ.நா. படையில் இணைந்து பணியாற்ற மொத்தம் 200 வீர, வீராங்கனைகளை அனுப்பிவைக்க இலங்கை முடிவுசெய்துள்ளது. Read more

யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் டொலர்கள் கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது.

இதற்கான உடன்படிக்கையில் இலங்கையும், இந்தியாவும் நேற்று கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்க்குயின்ஹாவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். Read more

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஏழாயிரம் கண்காணிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரல் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போது அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுவரை தேர்தல் தொடர்பில் 243 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – மண்டூர் பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

மதுவரித் திணைக்களத்தில் கடமைபுரியும் ஒரு வயதுக் குழந்தையின் தந்தையான கிருஷ்ணப்பிள்ளை வாசன் (33) என்பவரே இவ் விபத்தில் பலியானார் என மண்டூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுணதீவு இலுப்படிச்சேனையிலிருந்து மோட்டார் சைக்கிலில், அம்பாறைக்கு கடமைக்காக சென்றவேளையில் மண்டூர் வீதியில் வைத்து பஸ்வண்டியில் மோதுண்டதில் இவர் ஸ்தலத்திலே பலியானமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 44ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

இன்றுகாலை யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கின்ற நினைவுத் தூபிகளுக்கும் அங்கு கலந்து கொண்டவர்களால் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். Read more