Header image alt text

வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய அலங்கார நுழைவாயில் திறப்பு விழாவும், சாதனையாளர்கள் கெளரவிப்பும்.!(படங்கள் இணைப்பு)
thandikulam12வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் அலங்கார நுழைவாயில் திறப்பு விழாவும், சாதனையாளர்கள் கெளரவிப்பும் 08/09/2016 வியாழக்கிழமை வித்தியாலய முதல்வர் திருமதி எம்.எ.மோகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வின் முதல் நிகழ்வாக  பிரதம அதிதியாக கலந்து கொண்ட  புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் அலங்கார நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டது.  

Read more

udu1உடுவில் மகளிர் கல்லூரியில் ஆறு போராட்டத்திற்கு கிடைத்த அமைதியான தீர்வு உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மல்லாகம் மாவட்ட நீதவான் யூட்சன் மற்றும் மனித உரிமை அமைப்பின் அதிகாரிகள் குறித்த விடயத்தில் தலையிட்டு தீர்த்துவைத்துள்ளனர்.

கல்லூரிக்கு விரைந்த நீதவான் கல்லூரியின் அதிபராக இதுவரை காலமும் பதவி வகித்து வந்த சிரானி மில்ஸ், கல்லூரியின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சனீதா பற்றீசியா ஜெபரட்ணம், மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் தமது நியாயப்பாடுகளை மல்லாகம் நீதவானுக்கு தெரியப்படுத்தியதுடன், தமக்கு நேர்ந்த சித்திரவதைகளைக் கூறி நீதவானின் காலில் விழுந்தும் அழுதுள்ளனர். Read more

udu3உடுவில் மகளீர் கல்லூரிக்கு பா.ம உறுப்பினர், வடமாகாண அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் விஜயம்.  தமது அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் சிலரைக் கல்லூரி அதிபரின் விடுதி அறைக்குள் பூட்டி வைத்து அவர்கள் மீது  தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விடுதிக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளவும் தகவலறிந்து கல்லூரிக்கு பூரண பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. Read more

கிளிநொச்சியில் காணிகளை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டம்

kilinochifastகிளிநொச்சி பரவிப்பாய்ஞ்சான் கிராமத்தில் ராணுவத்தினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஒரு வாரமாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்டவர்கள், தற்போது உண்ணாவிரதப் போராட்டமாக மன்னெடுத்து இந்தப் போராட்டம் தொடர்கின்றது. பரவிப்பாய்ஞ்சான் கிராமத்தில் ராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், அவைகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

இந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் கோரியிருந்த போதிலும், காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படாத காரணத்தினாலேயே தாங்கள் உணவு உண்ணாமல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒரு தொடர் போராட்டமாக ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்னர், கிளிநொச்சி மாவட்டத்தின் வேறு பகுதிகளில் ராணுவத்தினரின் வசமிருந்த 142 ஏக்கர் காணிகளை படையினர் விடுவித்துள்ளனர்.
ஆயினும், இவர்களின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை. காணிகளை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

11,000 பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை அதிரடியாக நீக்கிய துருக்கி அரசு

turkey_துருக்கியில் தடை செய்யப்பட்ட பிகேகே என்றழைக்கப்படும் குர்திஸ்தான் பணியாளர்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 11 ஆயிரம் ஆசிரியர்களை துருக்கி அரசாங்கம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
துருக்கியின் தென் கிழக்கே உள்ள சுமார் 14 ஆயிரம் ஆசிரியர்கள் சில வழிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நம்புவதாக துருக்கி பிரதமர் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பள்ளிகள் மற்றும் போலிஸ், ராணுவம் மற்றும் சட்டத்துறைகளில் பல்லாயிரக்கணக்கானோர் களையெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விரைவாக விலக வேண்டும்
 
euஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் நடைமுறைகளை விரைவாக தொடங்குமாறு பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்டு டஸ்க் வலியுறுத்தியுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய டொனால்ட் டஸ்க், வெளியேறிய பிறகும் பிரிட்டனுடன் நெருக்கமான உறவைக் கடைப்பிடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் ஆனால் தற்போது தெரீசா மேயின் கையில் தான் முடிவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

ஸ்லோவாக்கியாவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் பங்கு பெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிற்கு ஒரு வாரம் முன்னதாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலக வேண்டும் என்று வாக்களித்த பிறகு பிரிட்டன் இல்லாமல் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும்.

கனவனை வெட்டிக் கொலை செய்த மனைவி நஞ்சருந்தி தற்கொலை முயற்சி

murderமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை கிராமத்தின் வீடொன்றில் கனவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மனைவி நஞ்சருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

(8.9.2016) வியாழக்கிழமை அதிகாலை மட்டக்களப்பு கல்லடி இசை நடனக்கல்லூரி வீதி நொச்சிமுனைக் கிராமத்திலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.  பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர். Read more

maithri & ranilநாங்கள் தான் மைத்திரிபால சிறிசேனவை  ஜனாதிபதியாக்கினோம்.    தற்போது நாங்கள் இணைந்து   ஆட்சியமைத்துள்ளோம்.     எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு   ஒன்றாக பயணிப்போம்.   அடுத்த  தேர்தலின் பின்னர் என்ன செய்வது என்று  அப்போது தீர்மானிப்போம் என்று அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

தனித்து போட்டியிடுவோம்.    இணைந்து ஆட்சியமைப்போம்   என்றும் அவர்  மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  Read more

இலங்கை தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னால் மஹிந்த – அஸாத் சாலி

malayaமலேசியாவில் இலங்கை தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னால் மஹிந்தவின் சதித்திட்டம் உள்ளதா என்பதை அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும். அத்துடன் தூதுவருக்கு எமது கவலையை தெரிவிப்பதோடு இந்த தாக்குதலையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், மஹிந்த ராஜபக்ஷ் தான் சிங்கள மக்களின் தலைவர் என்றும் தான் செல்லும் நாடுகளில் தமிழ் மக்கள் தனக்கு பிரச்சினை ஏற்படுத்துவதாகவும் இலங்கையில் இருக்கும் சிங்கள மக்களுக்கு காண்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

தூதுவருக்கு தாக்குதல் நடத்தியதில் இலங்கையர் எவரும் இல்லை. அனைவரும் இந்தியர்கள். அத்துடன் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்த கே.பி.யை மலேசியாவில் இருந்து தான் கொண்டுவந்தார்கள். அதேபோன்று மஹிந்த செல்லும் இடமெல்லாம் உதயங்க வீரதுங்க செல்கின்றார். அப்படியிருக்கும்போது இந்த சம்பவம் இவர்களுக்கு தெரிவித்து செய்யப்பட்ட தாக்குதலாகவே தெரிகின்றது. அத்துடன் மலேசியாவில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதும் அவரின் சுவரொட்டிகள் மீது தாக்குதல் நடத்துவதையும் காணக்கூடியதாக இருந்தது.

முப்படைகள், பொலிஸ் துறைகளில் தமிழர்கள் கூடுதலாக இணைத்துக் கொள்ளப்படுவர் – பிரதமர் ரணில்
 
ranil wickramaஎதிர்காலத்தில் இலங்கை முப்படைகள் மற்றும் பொலிஸ் துறைகளில் தமிழர்களை கூடுதலாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யுத்தம் ஆரம்பித்த பின்னர் அரசு பாதுகாப்பு தரப்பில் கடமையாற்றிய தமிழ் அதிகாரிகள் விடுதலை புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்த பிரதமர், இதன் காரணமாக தமிழர்கள் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு தயக்கம் காட்டியதாக குறிப்பிட்டார்.  அதே போன்று யுத்தம் இனவாத ரீதியில் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக தமிழர்கள் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு முன்வரவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு 206 தமிழர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக கூறிய அவர், இவர்கள் தற்போது வடகிழக்கு பிரதேசத்தில் கடமையாற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்று தெரிவித்த பிரதமர் விரம்சிங்க, அரசாங்கம் அதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமென்று மேலும் தெரிவித்தார்.

ஜிகா வைரஸ் 6 மாதத்துக்கு தாம்பத்தியம் கூடாது.
 
jikaஜிகா வைரஸ் காய்ச்சல் நோய் பிரேசில் உள்ளிட்ட அமெரிக்க நாடுகளில் பரவியது. தற்போது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பரவி வருகிறது. 60 நாடுகளில் இந்த நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வகை கொசுவினால் இந்த நோய் பரவுகிறது.

இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் 8 வாரத்துக்கு ஆணுறை பயன்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என உலக சுகாதார நிறுவனம் மன்பு கூறி இருந்தது.  ஆனால், இப்போது 6 மாதத்துக்கு அவர்கள் தாம்பத்யத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறியிருக்கிறது.

இத்தாலியை சேர்ந்த ஒருவர் ஜிகா வைரஸ் நோய் பாதித்த இடத்தில் இருந்து வந்திருந்தார். அவருடைய உயிரணுவில் 6 மாதத்துக்கு பிறகும் ஜிகா வைரஸ் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, உலக சுகாதார நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிலருக்கு ஜிகா வைரஸ் தாக்கினால் அது வெளியே தெரிய வரும். சிலருக்கு அறிகுறியே தெரியாது. எனவே, நோய் பாதிப்பு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் நிச்சயமாக 6 மாதத்துக்கு உடல் உறவை தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது

காவிரி நீர் திறந்துவிட்டமைக்கு எதிர்ப்புதெரிவித்து கர்நாடகாவில் எதிர்ப்புப் போராட்டம்

karnadakaதமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் போராட்டம் நடைபெற்றது. மண்டியா, மைசூர் மற்றும் பெங்களூரு உள்பட பல இடங்களிலும் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

ஜெயலலிதா மற்றும் சித்தராமையா உருவபொம்மை எரிப்பு , ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் பெண்களும் பங்கெடுப்பு, தமிழ் திரைப்பட பேனர்களை அகற்றி ஆர்ப்பாட்டம்

முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.
கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டது.

A2வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் கனடாக்கிளையைச் சேர்ந்த திரு.தங்கராசா ரூபன் அவர்களின் நிதி அனுசரனையுடன் சில்லாலையைச் சேர்ந்த தனிமையில் வாழும் கொலஸ்ரிகா என்ற வயதனா தாய் ஒருவருக்கு சுமார் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான கோழிக்கூடு மற்றும் கோழிகள் என்பன அவரின் வாழ்வதாரத்திற்காக அவரது வீட்டில் வைத்து எமது சங்கத்தின் முன்னால் தலைவரும் தற்போதைய கனடாக்கிளை உறுப்பினருமான திரு.ச.லோகேஸ்வரன்(ஈசன்) அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. Read more

மீண்டும் இலங்கைவரவுள்ளர் இந்தியப் பிரதமர் திரு. மோடி

Modi 2இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அடுத்த வருடம் மே மாதமளவில் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை வரும் அவர், இந்திய உதவியில் ஹட்டன் நகரில் நிர்மாணிக்கப்படும், வைத்தியசாலையொன்றை திறந்து வைக்கவுள்ளதோடு, கொழும்பில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிலும், கலந்து கொள்வார் என ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய ஊடகமான தி ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 2015ம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இலங்கை வந்த பாரத முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மீதான தாக்குதலை அடுத்து, சுமார் 28 ஆண்டுகள் அந்த நாட்டின் பிரதமர்கள் எவரும் இலங்கைக்கு விஜயம் செய்யாத நிலையில், மோடியின் அந்த வருகை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தமை விஷேட அம்சமாகும்.

பொலிஸ்மா அதிபரின் பெயரில் பேஸ்புக் மூலம் பெண்ணை ஏமாற்றியவர் கைது
 
facebookபொலிஸ்மா அதிபரின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பித்து, பெண்ணொருவரை ஏமாற்றிய நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கண்டியைச் சேர்ந்த பெண் ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர் நியூஸிலாந்தில் வசிப்பவர் எனவும், இலங்கை வந்தவேளையே இவரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து நேற்றையதினம் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் இவரை ஆஜர்படுத்தியவேளை நாளை வரை (08) விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க, இணையத்தைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து தினம் தினம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருவதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான குற்றம் இழைப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த விஷேட பயிற்சி அளிக்கப்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து வவுனியா விவசாயிகள் எச்சரிக்கை

vavunyaவவுனியா நகர குடிநீர் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு பதிலாக உடனடியாக மாற்றுக்காணிகள் வழங்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதன்கிழமையன்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து வவுனியா மன்னார் வீதியில் பேரணியாக அரச செயலகத்திற்குச் சென்று, வவுனியா அரசாங்க அதிபரிடம் இது தொடர்பில் மனுவொன்றைக் கையளித்திருக்கின்றனர். Read more

தம்மை யாழ். சிறைக்கு மாற்றுமாறு வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் கோரிக்கை-

sdfsddபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களும், தம்மை யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் 12பேரும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது 5ஆவது சந்தேகநபர், நீதவானிடம் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக சிறைச்சாலை அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என நீதவான் குறிப்பிட்டார். அத்துடன், வித்தியா கொலை தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையை தமக்கு வாசித்துக் காட்டவேண்டுமென மூன்றாவது சந்தேகநபரால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக சட்டமா அதிபரே தீர்மானிக்க வேண்டுமென சுட்டிக்காட்டிய நீதவான், வழக்கு தொடர்பான அனைத்து விடயங்களும் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குறித்த வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு அதுவரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். புதிய பொலிஸ் நிலையம் ஜனாதிபதி திறந்துவைக்க ஏற்பாடு-

jaffna new police stationயாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலையம் வருகின்ற 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைக்கவுள்ளார். தற்போது தனியார் ஓருவருக்கு சொந்தமான கட்டடத்தொகுதியிலேயே யாழ் பொலிஸ் நிலையம் இயங்கிவருகின்றது. புதிய பொலிஸ் நிலையம் யாழ் பிரதான வீதியில் யாழ் மாநகர சபை மைதானத்தின் அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யாழ். மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட நான்குமாடி கட்டடம் எதிர்வரும் 17ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதியுதவியில் 78 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு 4 மாடிக்கட்டடத்தின் கட்டு மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது குறித்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இக் கட்டடம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இக் கட்டடத்தில் உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள அலுவலகங்களும் ஏனைய அமைச்சுக்களின் கீழ் உள்ள அலுவலகங்களும் அமைந்துள்ளன. இதன்மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை விரிவுபடுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலை உடைப்பையடுத்து உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல்-

courts (2)வட மாகாணத்தில், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட புத்தர் சிலைகளுக்குப் பதிலாக, புதிய புத்தர் சிலைகளை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்ய உத்தரவிடுமாறு, புத்தசாசன அமைச்சருக்கு உத்தரவிடுமாறும், மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், வடக்கிலுள்ள புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதால், அரசியலமைப்புத் திருத்தத்தில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருந்த முன்னுரிமை மற்றும் பாதுகாப்பு என்பன மீறப்பட்டுள்ள என்றும் இதன்மூலம், பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளை வாசிக்க…..
Read more

Moolai1யாழ் வலிகாமம் மேற்கு மூளாய், மனிதவள முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி நேற்று (04.09.2016) ஞாயிற்றுக்கிழமை முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், நிகழ்வின் கௌரவ விருந்தினராக வலிமேற்கு முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் சசி அவர்களும்ம் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன்போது விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன. நிகழ்வின் இறுதியில் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி விளையாட்டுப் போட்டி நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்களுடன், சிறார்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.  Read more