Posted by plotenewseditor on 27 September 2016
Posted in செய்திகள்
இராணுவத் தளபதியாகவிருந்த தனது உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய, அண்மையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரியுள்ளார்.
லங்காதீப வாரஇதழுக்கு அளித்த செவ்வியில் அவர், 2009ஆம் ஆண்டு பிரபாகரன் கொல்லப்பட்ட பின், அவரது அடையாள அட்டையையும், அடையாளத் தகட்டையும், கொழும்புக்கு அனுப்புமாறு நான் மேஜர்ஜெனரல் கமால் குணரத்னவுக்கு உத்தரவிட்டேன். எனினும், அவை கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டதா என்பதை என்னால் அறிய முடியவில்லை. பிரபாகரனின் அடையாள அட்டையை மேஜர்ஜெனரல் கமால் குணரத்னவே வைத்திருக்கிறார் என்பதை அவர் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்திய பின்தான் எனக்குத் தெரியும். Read more