Header image alt text

lasanthaசண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் நாளை பொரளை கனத்தை மயானத்திலிருந்து மீள தோண்டி எடுக்கப்படவுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கல்கிசை நீதிவான் நீதிமன்றில் வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக கல்கிசை நீதிவான் மொஹம்மட் சஹாப்தீனின் உத்தரவுக்கு அமைவாக சடலம் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் காலை 8.30க்கு சடலம் தோண்டிஎடுக்கப்படவுள்ள நிலையில் தற்போது கனத்தை மயானத்திலுள்ள லசந்தவின் கல்லறைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

mahajana-college-1புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரிக்கு ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியொதுக்கீட்டில் இருந்தே அலுமாரிகள், மேசைகள் உள்ளிட்ட உபகரணங்கள் பெறப்பட்டு மேற்படி தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.  Read more

sfdfdகிளிநொச்சி – சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று கிபிர்க் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், மற்றும் விசேட அதிரடிப்படையினர் குண்டை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட குண்டு,  6அடி நீளமும் 300 கிலோ கிராம் எடை கொண்டதென விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் குறித்த குண்டு வெடிக்காத நிலையில் செயலிழந்துள்ளதாகவும் இதனை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்கில் அதிரடிப்படையினர் அதனை மீட்டுச் சென்றுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

suicideகொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கடற்படை வீரர் தற்கொலை செய்திருக்கலாம் என, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் இவர் நுகேகொடை – ஜம்புகஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவராகும். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

accident (12)திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்ற தனியார் பஸ்ஸொன்று, நிக்கவெள பகுதியிலுள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த ஏழு பெண்கள் உட்பட ஒன்பது பேர், அநுராதபுரம், ஹொரவ்பொத்தானை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த 9 பேர் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் ஏழு பேர், மேலதிக சிகிச்சைகளுக்காக, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். Read more

anurathapuram-jailஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் போகம்பரை சிறைச்சாலைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார்.

கண்டி நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதாலேயே அவர் போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏனைய 16 தமிழ் அரசியல் கைதிகளும் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். Read more

child protection authorityசிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்புக்கு புறம்பாக நீதிபதிகள் குழாத்தினரை உள்வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்படும் சிறுவர் பாதுகாப்பு கொள்கையினூடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் கூறினார். இதனடிப்படையில் பொலிஸ் பிரிவிலும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக விசேட பிரிவினரை உருவாக்குவதற்காக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். Read more

accidentகிளிநொச்சி – முறிகண்டி அக்கராயன் வீதியில் இரண்டாம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த வேலாயுதம் சதீஸ்கரன் என்ற 22 வயதுடைய இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வேலைமுடித்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்த வேளையிலே, எதிரே வந்த டிப்பருடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

p1400268ஏறக்குறைய 60 வருடங்களாக சாத்வீகத்தில் ஆயுதத்தில் போராடிவந்த நாங்கள் மீண்டும் மக்களுடைய பேராதரவுடன் தொடர்கின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான வெற்றியைக் கொடுக்கும் என புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ். முற்றவெளி மைதானத்தில் இன்று இடம்பெற்ற “எழுக தமிழ்” பேரணி நிறைவுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“எழுக தமிழ்” பேரணி யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஒரு அணியாகவும், பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்னொரு அணியாகவும் புறப்பட்டு, பேரணிகள் இரண்டும் பலாலிவீதி இலுப்பையடிச் சந்தியில் ஒன்றாக இணைந்து கே.கே.எஸ் வீதியினூடாக வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள திறந்தவெளியை அடைந்தது. Read more

d-sithadthan-m-pஉரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றிபெறச் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் எழுக தமிழ் பேரணி தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாளை 24 ஆம் திகதி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாள். இந்தப் பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு எமது உரிமைகளை நிலை நாட்டுவதற்கு குரல் கொடுக்க வேண்டும்.  Read more