maithripalaஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

புகையிலை பயன்பாட்டை குறைப்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த மாநாடு நாளையும் நாளை மறுதினமும் புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. சுமார் 180 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளனர். இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.