Header image alt text

sampanthanவடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நாம் அன்று தெரிவு செய்தது சரி என நான் நினைக்கிறேன’; என்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாளிதழ் ஒன்றின் சிறப்பு இதழ் வெளியீடு, யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
Read more

fishing-talksபுதுடில்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், கடலில் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை தாக்க மாட்டோம் என அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.

மேலும், மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா – இலங்கை பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. Read more

drawnயாழ். தொண்டமானாறு கடலில் நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனந்தகுமார் ஜெயபிரகாஸ் வயது (14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கந்தசஷ்டியின் இறுதி நாளான நேற்று சூரன் போர் பார்ப்பதற்கு, மேற்படி சிறுவன் உறவினர் ஒருவருடன் செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில் உறவினருக்கு தெரியாமல் சிறுவன் அருகில் உள்ள கடலில் சென்று நீராடியுள்ளான்.
Read more

dead.bodyபூட்டிய அறையிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை, யாழ். இளவாலை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.

பண்டத்தரிப்பு கீரிமலை வீதி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலம், அதேயிடத்தை சேர்ந்த செல்வநாதன் திசாளினி (வயது 21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட இளவாலை பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

arrest (2)ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் போரில் உடுவில் பகுதியில் சகோதரர்கள் இருவரை பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவினர் கைதுசெய்ததினால் அப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்ற பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவினர் வீட்டில் இருந்த சகோதரர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர்.
Read more

accident (12)அம்பாறை, ஒலுவில் அல்-ஜாயிஸா வித்தியாலயத்துக்கு அருகில் இன்று உழவு இயந்திரப்பெட்டி ஒன்று குடைசாய்ந்ததில் 20 இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒலுவில் அல்-ஜாயிஸா வித்தியாலயத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் முகாம் நடைபெற்று வருகின்றது. இம்முகாமில் கலந்துகொண்ட மேற்படி இளைஞர்கள் ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more