img_8134

img_7932தேசிய ரீதியில் நாடக போட்டிகளில் முதல் நிலைகளைப் பெற்ற நாடகங்களான  ‘பொய் முகம்’ ,’ரூ  மேன் ரூ  வோமேன் டெத் ஆப்ட்டர் பீஸ்’ ஆகிய  நாடகங்களின் காட்சிகளை இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் அனுசரணையில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரின் ஒழுங்கமைப்பில் வவுனியா காமினி மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் பிரமாண்டமான முறையில் 20/11/2016(ஞாயிற்றுக்கிழமை) இரண்டு காட்சிகளாக மேடையேற்றப்பட்டது.

முதல் காட்சி காலை 10.30 மணிக்கு தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.இவ் காலை மேடையேற்ற நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு முத்தையா கண்ணதாசன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திரு ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன்

கௌரவ அதிதிகளாக ஓமந்தை மத்திய கல்லூரி ஆசிரியர் திரு சுத்தானந்தன், செட்டிகுளம் மகா வித்தியாலய ஆசிரியர் திரு நா.பார்த்தீபன், நெடுங்கேணி பிரதேச சபையின் பிரதம எழுது வினைஞர் திரு அ.பிரசாந்தன், ஓமந்தை விவசாய போதனாசிரியர் திரு சோ.சுரேந்தர், ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு பேரின்பநாதன் அனோஜன், நிஸ்கோ திட்ட பணிப்பாளரும் வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரியுமான அஜித் சந்திரசேன, நிஸ்கோ திட்ட இயக்குனர் திரு ரி.அமுதராஜ், இளைஞர் கழக அதிகாரிகள், சம்மேளன உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

இரண்டாம்  காட்சி மாலை 4.30 மணிக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.

இவ் மாலை நிகழ்வின் பிரதம அதிதியாக அரச ஊழியர் தாதியர் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் திரு சோ.சுதாகர் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அதிதிகளாக யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி புஷ்பகாந்தன், சித்த வைத்தியர் இரா.மனோராஜ்,   அன்புக்கும் நடப்புக்குமான வலையமைப்பின் தலைவர் திரு ரவீந்திர டீ சில்வா, முகாமையாளர் திருமதி கிரேஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கௌரவ அதிதிகளாக நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய ஆசிரியர் திரு சுதாத்தரன், ஓமந்தை கிராம சேவையாளர் திருமதி அனுசியா, தொழிலதிபர் திரு சி.சயந்தன், ஐயனார் விளையாட்டுக்கழக செயலாளர் திரு ந.நிஷாந்தன் ஆகியோருடன் நிஸ்கோ திட்ட பணிப்பாளரும் வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரியுமான அஜித் சந்திரசேன, நிஸ்கோ திட்ட இயக்குனர் திரு ரி.அமுதராஜ், இளைஞர் கழக அதிகாரிகள், சம்மேளன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மாலை நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக நாடக துறையில் ஜனாதிபதி விருதினை பெற்ற வவுனியா கனகராஜன்குளத்தைச் சேர்ந்த திரு எம்.சுவீகரனின் போமைச் செய்தல் நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இவ் நிகழ்வுகளில் முற்று முழுதான சேகரிப்பு நிதியும் விசேட தேவைக்குட்பட்ட  மற்றும் வறுமைக்கோட்டிற்குள்ள இளைஞர்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.

இன்றைய நிகழ்வில் நிஸ்கோ திட்ட பணிப்பாளரும் வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரியுமான அஜித் சந்திரசேன அவர்களின் சிறப்புரையில்  வவுனியா மாவட்டத்தில் உள்ள இளைஞர் கழகங்களில் இவ் குறு நாடக விழாவை சிறப்பாக ஒழுங்கமைக்க கூடிய வகையில் சிறந்த இளைஞர் கழகமாக செயற்படும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தை நாம் தெரிவு செய்தோம்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய  இளைஞர் கழகத்தின் தலைவர் காண்டீபன் மற்றும் செயலாளர் கேசவன் ஆகியோருடன் மிக திறமையான பல  இளைஞர்களை தன்னகத்தே கொண்ட ஓர் நம்பிக்கைக்குரிய கழகமாக செயற்பட்டு வருவதனால் குறு நாடக விழாவை இவ் கழகத்தின் நிர்வாகத்திடம் நாம் ஒப்படைத்தோம்.
நம்பிக்கையில் வழங்கிய இவ் பாரிய பொறுப்பை மிக எளிதாகவும் பிரமாண்டமான முறையிலும் காலை அமர்வில் 200 ற்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்ததுடன்,  மாலை அமர்வில் நூற்றுக்கு மேற்படடவர்கள் கலந்து சிறப்பித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனிவரும் காலங்களிலும் பல்வேறுபட்ட சமூக பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வவுனியா மாவட்டத்தின் சிறந்த முன்னுதாரணமான கழகமாக மாறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்,

காலை அமர்வில் பிரதம உரை நிகழ்த்திய தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகர் திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் தனதுரையில்.

கழகத்தின் பிரமாண்டமான இவ் நிகழ்வினை ஒழுங்கமைத்த எமது இளைஞர்களை நான் மனதார வாழ்த்துவதுடன், இவர்களின் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் கூறுவதுடன். தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சேவைகள் எமது சமூகத்திற்கு அளப்பெரியது. அவ் சேவைகள் தற்போது இன்னும் விரிவாக்கப்பட்டு இளைஞர்களின் கல்வி வாழ்வாதார முயற்சிகளில் முன்னோக்கி நகர்வதையிட்டு பெருமிதம் கொள்கிறேன் என்றார். 

img_7779 img_7781img_7782 img_7785 img_7787 img_7788 img_7789 img_7790 img_7794 img_7795 img_7796 img_7797 img_7798 img_7800 img_7804 img_7810 img_7811 img_7843 img_7859 img_7909 img_7932 img_7998 img_7999 img_8000 img_8001 img_8002 img_8003 img_8004 img_8005 img_8006 img_8007 img_8008 img_8009 img_8010 img_8011 img_8012 img_8013 img_8014 img_8016 img_8018 img_8020 img_8036 img_8037 img_8068 img_8073 img_8076 img_8084 img_8094 img_8099 img_8104 img_8109 img_8110 img_8111 img_8115 img_8119 img_8122 img_8123 img_8127 img_8130 img_8134 img_8163 img_8164 img_8173 img_8175