Header image alt text

arrest (9)ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பங்கேற்ற நிகழ்வு நடைபெறவிருந்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முருகையா சர்மிலன் என்ற முன்னாள் பெண்புலிப் போராளி ஒருவரின் சகோதரர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரை தடாகத்தில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றுக்கான முன் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். Read more

south korea forign minதென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் செ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இலங்கை வரும் அவர் மூன்று தினங்களுக்கு இலங்கையில் தங்கி இருப்பாரெனவும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 40 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த விஜயத்தின்போது அவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டவர்களை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NPC (4)வடக்கு மாகாண சபையில் இன்று நடைபெற்றிருந்த சிறப்பு அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் சபையை அவமதிக்கும் வகையில் செயற்ப்பட்டதாகவும், இதனால் வடக்கு மாகாண சபை அமர்வின் ஆரம்பத்திலேயே குழப்பநிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தால், ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கொண்டுவந்த பிரேரணை மீதான விவாதத்தின்போதே இந்த குழப்பநிலை உருவாகியுள்ளது. இதன்போது, ஆரம்பத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்மானமும் தற்பொழுது அவையில் வழங்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பான அறிக்கையும் மாற்றமாக உள்ளது. Read more

cvbcvbvகொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு லோட்டஸ் வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமையினாலேயே பொலிஸாரினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சைட்டம் உள்ளிட்ட தனியார் பல்கலைக்கழகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

fsdfவவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணியை, காணி உரிமையாளர்கள் அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

கடந்த 20 வருடங்களாக, வடக்கு – தெற்குக்கு செல்லும் பயணிகள் மற்றும் வாகனங்களை சோதனையிடும் பலமான சோதனைச்சவடியாக இது காணப்பட்டது. 18 குடும்பங்களுக்குரிய 41 ஏக்கர் காணியில் இச் சோதனைச்சாவடி அமைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆட்சிக்காலத்தில் இக்காணிகளை சுவீகரிப்பதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. Read more

dfgகிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இரு வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தபடும்போது, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர்கள் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டனர் என தெரிவிக்கப்பட்டு ஐவர் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வழக்கு, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு, எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more

sவவுனியாவில் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஷெல் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஷெல் உலுக்குளம் பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து காணியின் உரிமையாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணியின் உரிமையாளர் தனது காணியினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மண்ணில் புதையுண்ட நிலையில் 60 மில்லி மீற்றர் ஷெல்லினை கண்டுள்ளார்.

article_1489406274-1முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி, பிரதேச மக்கள், நேற்று முன்தினம் முதல் மேற்கொண்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன், இந்தப் போராட்டம் கவனயீர்ப்பு போராட்டமாக தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் ஆகியோர், அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர். Read more

20170131_170610கடந்த மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் கற்பானைக்குளத்தினை பார்வையிடுவதற்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்களை வழங்கியதோடு, அம் மக்களின் நீண்டகால குறையாக காணப்பட்ட பாலர் பாடசாலைக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள், கதிரை, மேசைகள் போன்றவற்றின் தேவைப்பட்டை மக்களின் ஊடாக அறிந்து கொண்டார்.

இதற்கமைய கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் அடிப்படை வசதிகளின்றி இயங்கிவரும் கற்பானைக்குளம் மழலைகள் அறிவாலயம் பாலர் பாடசாலையினை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள், Read more

sfd (2)கனேடிய பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அங்கு வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள் சிலரும் இன்று அதிகாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் சில மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகளை கண்காணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, இலங்கையின் முதலீட்டு சந்தர்ப்பங்கள் தொடர்பாகவும் இவர்கள் ஆராயவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.