Header image alt text

trainரயில் ஓட்டுநர்கள் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர்.

இன்றுகாலை போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, ரயில் ஓட்டுநர்கள் சங்க செயலாளர் இந்திக்க தொடம்கொட கூறியுள்ளார். இக் கலந்துரையாடலின் போது, ரயில் ஓட்டுநர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க நாளை அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளார். Read more

sமட்டக்களப்பு மாவட்டத்தில், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு இலவசமாக மின்சாரத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்கு மாலைத்தீவின் சுநநெறயடிடந நநெசபல ஆயடனiஎநள நிறுவனத்துடன் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் இன்று ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் மாலைத்தீவின் சுநநெறயடிடந நநெசபல ஆயடனiஎநள நிறுவனத்தின் தலைவர் இப்ராஹீம் நஸீட் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். Read more

tabமீனவர்களுக்கு டெப் கனணியை வழங்கும் வேலைத் திட்டத்திற்காக 149 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.

விஷேடமாக இவை நீரில் விழுந்தாலும் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இவற்றில் மீன்பிடிப்பது தொடர்பான தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தவிர்ப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

american navy shipஅமெரிக்க கடற்படையின் கப்பலான ‘யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்’ இன்று கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா கப்பலான ‘யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்’ பயிற்சி நடவடிக்கையின் அடிப்படையிலேயே இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளது. ‘யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்’ கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் நான்கு நாட்களில் இரு தரப்பினருக்குமிடையில் பயிற்சி மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் பல நட்பு ரீதியான விளையாட்டுக்கள் குறிப்பாக கூடைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

gfgகிளிநொச்சி மாவட்டத்தில் ராணுவத்தின் வசமுள்ள திணைக்கள காணிகளை விடுவிக்க கோரி மாவட்ட விவசாய சம்மேளனத்தினால் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வட்டக்கச்சி பண்ணைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கண்டனப் பேரணி சிறிது தூரம் ஊர்வலமாக வந்து பின்னர் அங்கிருந்து வாகனங்களில் கிளிநொச்சி நகருக்கு வருகை தந்து மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக சென்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் மகஜர்கள் மாவட்ட அரச அதிபரிம் கையளிக்கப்பட்டது. Read more

indian shipபயிற்சி நடவடிக்கையொன்றுக்கான விஜயத்தை மேற்கொண்டு, இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் தர்ஷக், கொழும்புத் துறைமுகத்தை, நேற்று வந்தடைந்துள்ளது.

மேற்கு கடற்படைப் பகுதியின் கொமாண்டர் ரியர் அட்மிரல் நிராஜ அட்டிகல, அந்தக் கப்பலின் கப்டனான பியூஸ் பவ்சேவை, சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். Read more

police ...காலி – பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்கள் சில இனம் தெரியாத நபர்களினால் இன்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பக ஆவணங்கள் மற்றம் சேமிப்பு ஆவணங்களே இவ்வாறு காலை காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

mahinda desapriya (3)மக்களுக்கு தேர்தல் தொடர்பிலும் பாராளுமன்றம் தொடர்பிலும் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான புதிய வாக்காளர்களின் பதிவுகள் கடந்தகாலத்தை விடவும் 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை நடத்தாது காலம் கடத்துவது ஜனநாயகத்தின் மீதான அத்துமீறல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

kilinochchi missing protest 01கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 35வது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த மாதம் 20ஆம் திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

pannankandy protest 01கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்கிறது.

காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்றனர். இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் அவ்வாறே வாழ முடியாது. Read more