ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தாலும் இலங்கைக்குள் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சர்வதேச கட்டளைகளுக்கு அடிபணிய ஒருபோதும் தயார் இல்லை என சிறீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நகர்வுகள் மிகவும் மோசமான வகையில் அமைந்துள்ளது. வெகு விரைவில் கலப்பு அரசாங்கத்தை கலைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். Read more








