Header image alt text

lanka malaysiaபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன மற்றும் மலேஷிய பாதுகாப்பு அமைச்சர் டாடோ சேரி நிஷாமுதின் ஆகியோருக்கு இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தத் தேவையான விடயங்கள் குறித்து இதன்போது, கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது. Read more

sri lankan returnsஇந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 36 பேர் நேற்று நாடு திரும்பியுள்ளனர். மேற்படி 36 பேரையும், யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு, இரண்டு விமானங்களின் மூலம், சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு, நேற்று பிற்கல் அழைத்து வந்துள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள், மும்பை மற்றும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்ததாக அவ்வமைப்பு மேலும் கூறியுள்ளது. Read more

wickramasingheமலேஷியாவில் நடைபெறவுள்ள ரோயல் பொலிஸ் தினத்தில் கலந்துகொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சென்றுள்ளதால், பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேஷியா, கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 210ஆவது ரோயல் பொலிஸ் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பொலிஸ்மா அதிபர், இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். நான்கு வாரங்கள் பதில் பதில் பொலிஸ்மா அதிபராக சீ.டீ.விக்ரமசிங்க கடமையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துயர்பகிர்வு

Posted by plotenewseditor on 24 March 2017
Posted in செய்திகள் 

image-0

 

 

 

 

 

 

 

 

 

தோழர் குலேந்திரன் அவர்களின் சகோதரர்

தொடர்புகட்கு: 0094777498461

police-stationபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜே.ஏ.எஸ்.என்.கே.ஜயசிங்க, களுத்துறை இலங்கை பொலிஸ் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கரடியனாறு பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச்.ஆர்.பீ.சேனாநாயக்க, பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் பரிசோதகர் ஆர்.சி.ஹெட்டியாராச்சி, நுகேகொடையிலிருந்து முல்லேரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். Read more

r44இலங்கையில் போருக்குப் பிறகு நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டு காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் நிபந்தனைகளை நிறைவேற்ற 2015-ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் வழங்கிய ஒன்றரை ஆண்டு அவகாச காலத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற விமர்சனத்தை இலங்கை தமிழர் அமைப்புக்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்வைத்தனர். Read more

londonதாக்குதலின்போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர், கென்ட் பகுதியில் பிறந்தவர். தற்போது எந்தவிதமான போலீஸ் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாதவர். ஆனால், முன்பு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர். மேற்கு மிட்லேன்ட்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்த மசூத் வயது 52.

காவலர் கீத் பால்மர், ஆய்ஷh ஃபரேட் என்ற பெண் மற்றம் அமெரிக்க சுற்றுலாப் பயணி குர்த் கோச்ரன் ஆகியோர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவத்தை நடத்தியது தாங்கள் தான் என இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) என்று கூறிக்கொள்ளும் அமைப்பு தெரிவித்துள்ளது. Read more

w1வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக கனடா நாட்டைச் சேர்ந்த வைத்தியர் தனயசிங்கம் பரமனாதன் அவர்களால் தனது பிறந்தநாளை முன்னிட்டு முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டாரத்தை சேர்ந்த கடந்த யுத்ததத்தின் போது தனது கைகள் இரண்டையும் கண் ஒன்றையும் இழந்த நிலோசன் றசிதா என்பவருக்கு வாழ்வாதார உதவியாக 40,000 ரூபா வழங்கபட்டுள்ளது.

மேற்படி பயனாளி வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இப் பயனாளிக்கு தனது பிறந்தநாளை முன்னிட்டு இவ் கைங்கரியத்தை ஆற்றியுள்ள தனயசிங்கம் பரமநாதன் ஜயாவுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினராலும் பயனாளி சார்பாகவும் Read more

ddfdfஇலங்கை இராணுவ படை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இராணுவ படை தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக கடந்த 1ஆம் திகதி ஓய்வு பெற்ற நிலையில் அந்த இடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

qqமுல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களின் இரு பிள்ளைகளுக்கு புதிய துவிச்சக்கர வண்டிகள் இன்று புதுக்குடியிருப்பில் வைத்து வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அனுசரணையினை எமது புலம்பெயர் உறவான கனடா நாட்டைச் சேர்ந்த செந்தூரன் காவியா அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு அவரது பெற்றோர் வழங்கியுள்ளனர்.

கல்வியில் ஆர்வமுள்ள பல துன்பங்களின் மத்தியிலும் கல்வி கற்று வரும் தமக்கு தமது கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டிகளை தந்துதவுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க புதுக்குடியிருப்பு விசுவமடுவைச் சேர்ந்த விஐதரன் சௌபனா மற்றும் முள்ளியவளையைச் சேர்ந்த சிவகுமார் தர்சினி ஆகிய இரு மாணவிகளுக்கும் ரூபா 31,000 பெறுமதியான இரு புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. Read more