Header image alt text

image_36f976fbe6ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, வட மாகாண மீன்பிடி விவகார அமைச்சர் கந்தையா சிவநேசன், கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

கௌரவ மகிந்த அமரவீர, பா.உ
கடற்றொழில் அமைச்சர்,
கொழும்பு.

கௌரவ அமைச்சர் அவர்களுக்கு,

கடந்த 20.09.2017 அன்று, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களுடன், வடமாகாண மீன்பிடித்துறை சார்ந்த விடயங்களுக்கான அமைச்சர் என்ற ரீதியில் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கிணங்க, கீழ்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் முக்கியத்துவம் கருதி தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன். Read more

president qatarகட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் அந்த நாட்டின் பிரதமர் சேய்க் அப்துல்லா பின் நசார் பின் காலிபா அல் தானியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை எதிர்காலத்தில் பல்வேறுப்பட்ட துறைகள் ஊடாக மேலும் விஸ்தரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் மின்சாரம் மற்றும் சக்தி வளத் துறைகளில் நிலவும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து ஜனாதிபதி கட்டார் பிரதமருக்கு விளக்கியுள்ளார். அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பினை கட்டார் பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார். Read more

housing scheme (2)50 மாதிரி கிராமங்கள் ஊடாக 1200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன. இதற்காக இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபாய் மானியமாக வழங்கவுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.கே.கே.அத்துகோரல ஆகியோருக்கு இடையில் இந்த புரிந்துணர்வுகள் நேற்று கைச்சாத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

jailதமிழ் அரசியல் கைதியான கணகரத்தினம் ஜீவரத்தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணகரத்தினம் ஜீவரத்தினம் திருகோணமலையில் கைது செய்யப்பட்டு, 11 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வந்த நிலையில், சட்ட மா அதிபரினால் 2014 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. Read more

electronic Identity cardஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதன் முதற்கட்டமாக, இன்று முதல் தற்காலிக அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. ஆட்பதிவு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் வரையில், இதனைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய அடையாள அட்டைகளைக் கொண்டுள்ளவர்கள், புதிய தற்காலிக அட்டைகளை பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்றும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

NICஒரே இலக்கத்தில் இரு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குருதெனிய சிங்ஹாரகம 10 ஏக்கர் பகுதியை சேர்ந்த ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த ஏக்கநாயக்க முதியன்சலாகே புஞ்சிரத்ன என்ற நபர் அரச வங்கியொன்றில் சேமிப்பு கண்கொன்றை ஆரம்பிக்க சென்றுள்ளார். இதன்போது தனது தேசிய அடையாள அட்டையை வங்கி உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய அவருக்கு சிறிது நேரத்தில் அதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. Read more

tdih-feb01-re-HDஅப்பா, அண்ணா, அச்சச்சோ ஆகிய வார்த்தைகள் ஆங்கில வார்தையாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பெறுகிறது. உலகின் முக்கிய மொழிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை தமது அகராதியில் உட்புகுத்துவதை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வழக்கமாக செய்து வருகிறது.

மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இவ்வாறான வார்த்தைகளை சேர்க்கும் நடவடிக்கை இடம்பெறுவது வழக்கம். இந்த ஆண்டு இதுவரை உலகின் பல மொழிகளில் உள்ள சுமார் ஆயிரம் வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் புதிய பதிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. Read more

wasimரக்பி வீரர் வசிம் தாஜூதீனின் கொலை வழக்குடன் தொடர்புடைய கொழும்பு முன்னாள் பிரதம சட்டமன்ற வைத்திய அதிகாரி, பேராசிரியர் ஆனந்த சமரசேகர இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வசிம் தாஜூதீனின் தலைப்பகுதியின் எச்சங்கள் காணாமற்போனமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் பேராசிரியர் ஆனந்த சமரசேகரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தது. Read more

1428324512body-found-policeதிருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள கிளப்பன்பேர்க் கடற்படை முகாமிலிருந்து கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கடற்படையினரின் உதவியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெக்கிராவ கல்நெவ பகுதியைச் சேர்ந்த பீ.எம். புஷ்பகுமார (வயது (28) எனும் கடற்படை வீரரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு முகாமிற்கு உறங்குவதற்குச் சென்ற கடற்படை வீரரே இன்று காலையில் சடமாக கிடந்ததாக சீனக்குடா பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. Read more

landslide-warningகண்டி ஹேவாஹெட்ட, ருக்கூட் தோட்டத்தில் நிலவும் மண்சரிவு அபாயம் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று கடும் மழை பெய்ததை அடுத்து, முன் எச்சரிக்கையுடன் இவர்கள் சனசமூக நிலையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 17 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 51 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மண் சரிவு அபாயம் காரணமாக இந்த மக்கள் கடந்த வருடமும் இடம்பெயர்ந்திருந்தனர்.