Header image alt text

russian helicoptersரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட உலங்கு வானூர்திகளை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளது. மலேசியாவில் இடம்பெறும் கண்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த ரஸ்யாவின் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு சேவையின் உதவி தலைவர் மிக்ஹெய்ல் பெட்டுவ்கொவ் இதனை தெரிவித்துள்ளதாக மலேசிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

உலங்கு வானூர்திகளுக்கு உதிரிபாகங்களை வழங்குவது உட்பட்ட பணிகளை இந்த நிலையம் மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது எம் ஐ 8-17ரக உலங்கு வானூர்திகள், 12 தாக்குதல் உலங்கு வானூர்திகள் 6, எம்.எம்.பி சண்டை உலங்கு வானூர்திகள் 2 மற்றும் சுமார் 50 துருப்புக்காவிகள் என்பன இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

sri lanka pakistanஇலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஊடாக முழுமையான நன்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரமர் நவாஷ் ஷெரிப் இதனைத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இலங்கை, பாகிஸ்தான வர்த்தக முதலீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் இப்டிகார் அஸிஸை சந்தித்தப்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read more

maithripalaரஷ்யாவு மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு நல்லுறவை எதிர்வரும் நூற்றாண்டுக்கு பலமாக முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் மொஸ்கோ நகரில் இடம்பெற்ற இலங்கையர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது தொடர்ந்து உரையாற்றியுள்ள ஜனாதிபதி, தனது இந்த விஜயம் தற்போதைய அரசாங்கம் சர்வதேச ரீதியில் முன்னெடுத்து வரும் கொள்கையை தெளிவாக எடுத்துக் காட்டுவதோடு, சர்வதேச ரீதியில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். Read more

sri lankaநேற்றுக்காலை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டுன் பிரகாரம், உள்நாட்டு விமான சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்தள்ளதாக தெரியவருகின்றது.

இதற்கான அனுமதியின் பின் மேற்படி உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் பொல்கஹாவெல- குருநாகல் வரையிலும், அளுத்கமை -காலி பகுதிகளுக்கு, இரட்டை புகையிரத பாதைகளை நிர்மாணிப்பதற்கும் 1.05 பில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மூன்று திட்டங்களுக்கும் இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. Read more

jail busகளுத்துறையில் சிறைச்சாலை பஸ்ஸின்மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தையடுத்து, சிறைச்சாலைகள மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் பரிந்துரையின் பேரில், கேகாலை சிறைச்சாலையிலுள்ள அதிகாரிகள், 0.7 மில்லியன் ரூபாய் செலவில், சிறைச்சாலை பஸ்ஸ_க்கு மாற்றீடாக, குண்டு துளைக்காத பஸ்ஸொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் மற்றும் கைதிகள் ஐந்து பேர் என்று கொல்லப்பட்ட நிலையில், கைதிகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்வதற்கு, அமைச்சரால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டதையடுத்தே, இந்த பஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. Read more

viyalendran (2)நல்லாட்சியிலும் தீய விடயங்கள் தொடர்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த நாட்டைப் போதைப் பொருள் பாவனையற்ற நாடாக மாற்றுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். அவரின் போதையொழிப்பு அறிவிப்பு எல்லோராலும் வரவேற்கப்பட்டது. ஆனால், மட்டக்களப்பு வாழைச்சேனையிலே மாபெரும் மதுபான உற்பத்திச்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read more

ssfகிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை எனக் கோரி ஆரம்பித்த போராட்டம் இன்று 3 ஆவது நாளாக தொடருகிறது.

இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் என குறித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராடும் மக்கள் கூறியுள்ளனர்.

mannarமன்னார் பாப்பமோட்டைப் பகுதியிலிருந்து மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வன்னி விமானப்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, மோட்டார் குண்டுகள், மிதி வெடிகள் மற்றும் புலிகளால் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், இவை நீதிமன்ற உத்தரவின் பெயரில், செயழிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

keppapilavuஇராணுவத்தினர் வசமிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட கேப்பாபிலவு காணிகளில் இருந்து பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தின் மூலம் அண்மையில் தமது பூர்வீக நிலங்களை மீட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே விடுவிக்கப்பட்ட சில காணிகளில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தினைத் தற்போது தோற்றுவித்திருப்பதாக கூறப்படுகின்றது. குறித்த மக்கள் அண்மையில் தமது காணிகளைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும்போது பயங்கர சத்தத்துடன் வெடிபொருள் ஒன்று வெடித்ததாகவும், இதனால் எதுவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more

chandrikaமுன்­னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா குமா­­ர­ண­துங்க, நாளை யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்­கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அலு­வ­ல­கத்­தால் வட­ம­ராட்­சிப் பகு­தி­யில் முன்­னெ­டுக்கப்­ப­டும் நட­வ­டிக்­கை­களை தொடக்கி வைப்­ப­தற்­கும், பார்­வை­யி­டு­வ­தற்­குமே அவர் யாழ்ப்­பா­ணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். Read more