டெல்லி சென்றிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கடந்த மார்ச் 6ம் திகதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் காயமடைந்துள்ளார். 
இந்த சம்பவத்தை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, இந்திய மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மீனவர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக அமைச்சர்கள் உறுதிமொழி அளித்தனர். Read more
		    






