Header image alt text

mahindaமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று காலை இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் அவர் இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்று மற்றும் நாளை இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச பௌத்த சம்மேளத்தின் பிரதான விருந்தினராக கலந்து கொள்ள அவர் இவ்வாறு இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

trainரயில் மூலம் பொருட்களை அனுப்பும் சேவைக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தக் கட்டண அதிகரிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகவுள்ளது.

குறிப்பாக, இந்தக் கட்டண உயர்வு ஐம்பது சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. எனினும், கட்டண உயர்வுக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லையென்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

1338249149cataloniya-Lஸ்பெயினிலிருந்து விடுபடுவதற்கான வாக்கெடுப்பை கெட்டலோனியா பாராளுமன்றம் நடத்தியுள்ளது. இதன்படி, சுதந்திரம் பெறவேண்டும் என்பதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. ஸ்பெயின் அரசாங்கம் நேரடி ஆட்சியை திணிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வந்தமையால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

image_c0cbdb5102“உயிரிழந்த தந்தை குறித்து எனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. அப்பா எப்ப வருவார்? அப்பா கண்திறந்திட்டாரா? எப்ப பார்ப்பார்? ஏன் வரவில்லை? போஸ்மோட்டத்தில் தந்தையைப் பார்த்துவிட்டு எங்கட அப்பா வெள்ளைதானே ஏன் கறுத்தவர்? வெள்ளையா வருவாரா?

அப்பா வர நாங்கள் பாக்குக்கு போவோம் என்று அடுக்கடுக்காக என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. எத்தனை காலம் ஏமாற்றுவது?” என, சுனித்ரா எழுதிய கடிதம் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம், அரியாலை மாம்பழச் சந்தி பகுதி வீடொன்றில் மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் எழுதிய கடைசிக் கடிதம் பொலிஸில் சிக்கியுள்ளது. Read more

xzczxcவவுனியா உக்கிளாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமையில் இருந்து காணாமல் போயிருந்த 26 வயதுடைய தியாகலிங்கம் ரகுவரன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

indonesia factoryஇந்தோனேசியத் தலைநகரான ஜகத்ராவுக்கு அருகில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இவ் வெடிப்புச் சம்பவத்தில் 46 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் வைத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். Read more

image_933ceab1f1றோகிஞ்சா அகதிகளுக்கு உதவ இலங்கை அரசாங்கம் முன் வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், தென்கொரியா, கனடா, பிரான்ஸ், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும், பல்வேறு அமைப்புகளும், றோகிஞ்சா அகதிகளுக்கு உதவிகளை வழங்கி வருகின்றநிலையில், குறித்த பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடக செயலாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

arms and ammunitionகிளிநொச்சி வட்டக்கச்சி புழுதியாறு குளத்தில் நேற்றிரவு பல வெடிபொருட்கள் அதிரடிப்படையால் மீட்கப்பட்டுள்ளன. புலிகளின் விமான ஓடுபாதைகள் உள்ள இடத்தில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது 60 மி.மீ 10 மோட்டார் செல்கள், 81 மி.மீ 01 மோட்டார் செல் நேற்று இரவு விசேட அதிரடிப்படையால் மீட்கப்பட்டுள்ளன. Read more

faiser mustafaஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல், நவம்பர் மாதம் 1ஆம் திகதியன்று வெ ளியிடப்படும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

தற்போது நடத்தி கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் திருத்தம் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை தேர்தல் முறைமைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் கூட்டம் நாளை ஏறாவூரில் இடம்பெறவுள்ளது. Read more

teacherகல்வி அமைச்சினால் கடந்த மூன்று வருடங்களாக ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதனால் சுமார் ஒரு இலட்சம் ஆசிரியர்கள் பதவி உயர்வினை பெறாத நிலையில் கடமையாற்றி வருவதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read more