Header image alt text

armyஇந்த வருடம் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் முதலாவது பொதுமன்னிப்புக் காலம், இன்று முதல் ஆரம்பமானது. குறித்த பொதுமன்னிப்புக் காலம், எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என, இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். Read more

warships-americaஅமெ­ரிக்­காவின் ஆறு அதி­ந­வீன நாச­காரி போர்க்­கப்­பல்கள் இம்­மாத இறு­தியில் இலங்­கையை வந்­த­டை­ய­வுள்­ளன. விமானம் தாங்­கிய போர்க்­கப்பல் ஒன்­றுடன் இணைந்தே இந்த போர்க்­கப்­பல்கள் இலங்­கையை நோக்­கிய பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளன.

அத்துடன் சீனா, இந்­தியா, பாகிஸ்தான், தென்­கொ­ரிய போர்க்­கப்­பல்­களும் இலங்கை வர­வுள்­ளன. Read more

dqweதமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லை­க்க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்து போராட்டம் ஒன்றை இன்­றைய தினம் ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக யாழ்.பல்­க­லை­க்க­ழக கலைப்­பீட மற்றும் அனைத்து பீட மாணவர் ஒன்­றி­யங்கள் அறி­வித்­துள்­ளன.

இப் போராட்டம் தொடர்­பாக அவர்கள் அனுப்பி வைத்­துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, வடக்கு, கிழக்கு தழு­விய ரீதியில் அர­சியல் கைதிகள் விடு­த­லையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்து வேட்டை போராட்­டத்தை மேற்­கொள்ள தீர்­மானம் செய்­துள்ளோம். இப் போராட்டத்தில் நாம் அர­சியல் கைதிகள் தொடர்­பாக பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்தே இப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்ளோம். Read more

000000000000000000வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக கனடாவைச் சேர்ந்த நலன்விரும்பிகளினால் தேராவில் கிழக்கு உடையார்கட்டை முகவரியாக கொண்ட தனபாலசிங்கம் சோபனா எனும் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்க்கு ரூபா 208,000 செலவில் புதிய கிணறு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

தனபாலசிங்கம் சோபனா அவர்கள் கடந்த 15.06.2017 ஆம் திகதி தனது விண்ணப்பத்தில் தெரிவித்ததாவது, தனது கணவன் கடந்த கால யுத்தத்தின்போது காணமால் ஆக்கப்பட்டுள்ளதுடன். மூன்று பிள்ளைகளுடன் அன்றாடம் கூலித் தொழில் செய்து தனது குடும்பத்தினை கொண்;டு நடத்துவதுடன் தான் மீள்குடியேற்றம் தாமதமாகியதனால் வீட்டுத்திட்டமும் கிடைக்கவில்லை. Read more

zinso abezஜப்பானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி, 312 இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

வடகொரியா மீது உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இதையடுத்து, வடகொரியாவுக்கு எதிரான ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நடவடிக்கை குறித்து நடத்தப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 44 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். Read more

train yaldeviநாவற்குழி பாலம் ஒன்றை சீரமைக்கும் நடவடிக்கை காரணமாக இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, 5 நாட்கள், வடக்கு தொடரூந்து சேவையின் நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணம் வரையான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

தொடரூந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்து நாவற்குழி வரை மாத்திரமே தொடரூந்து சேவை இடம்பெறும் என தொடரூந்து கண்காணிப்பாளர் விஜய் சமரசிங்க தெரிவித்தள்ளார். ஆயினும் கொழும்பிலிருந்து நாவற்குழி வரையான ரயில் சேவைகள் வழமைபோல முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். Read more

shot deadயாழ்ப்பாணம் மணியம் தோட்ட பகுதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு சுவாசப்பையில் ஏற்பட்ட கடுமையான இரத்த போக்கினால் அந் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.மணியம் தோட்டம் உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த டொன் பொஸ்கோ ரிச்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. Read more

sasadsadasdமட்டக்களப்பு, தாழங்குடாவிலுள்ள வீடொன்றிலிருந்து ஆறு பிள்ளைகளின் தாயான விஜயலட்சுமி (வயது 47) எனும் பெண், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண், சடலமாகக் கிடப்பதை கண்ட அவ்வீட்டிலுள்ளவர்கள், காத்தான்குடி பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார், பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளதுடன், ஆரம்பக்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர். Read more

protest-4மட்டக்களப்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் உயிரிழந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கூழாவடியில் வசிக்கும் 43 வயதான சிவகுமார் லதாஸ்ரீ பிரசவ வலி காரணமாக கடந்த நான்காம் திகதி பிற்பகல் 7.00 மணிக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 7.30 மணிக்கு குழந்தையை பிரசவித்துள்ளார். வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய சத்திரசிகிச்சை மூலம் ஆண்குழந்தை குழந்தை கிடைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். Read more

ssssஎமது புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நிவேசன் அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள குரவில் தமிழ் பாடசாலையைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக பாடசாலை சீரடை துணிகளை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.

மேற்படி விண்ணப்பத்தில் பாடசாலை அதிபர் தெரிவிக்கையில், கடந்த கால யுத்தத்தின்போது தங்களது பாடசாலையும் பாதிப்புக்குள்ளானதாகவும், இங்கு கல்வி கற்க்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் அரசாங்கத்தினால் வழங்கப்படும் சீருடையை தவிர மாற்று சீருடை வேண்டுவதற்கு வசதியற்றவர்கள் எனவே தங்களால் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணிகளை தந்துதவுமாறு குறிப்பிட்டு இருந்தார். Read more