Header image alt text

img_8134

img_7932தேசிய ரீதியில் நாடக போட்டிகளில் முதல் நிலைகளைப் பெற்ற நாடகங்களான  ‘பொய் முகம்’ ,’ரூ  மேன் ரூ  வோமேன் டெத் ஆப்ட்டர் பீஸ்’ ஆகிய  நாடகங்களின் காட்சிகளை இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் அனுசரணையில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரின் ஒழுங்கமைப்பில் வவுனியா காமினி மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் பிரமாண்டமான முறையில் 20/11/2016(ஞாயிற்றுக்கிழமை) இரண்டு காட்சிகளாக மேடையேற்றப்பட்டது.

முதல் காட்சி காலை 10.30 மணிக்கு தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. Read more

meenavarthinamசர்வதேச மீனவர் தினத்தையொட்டி வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இலங்கை மற்றும் இந்திய மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இருநாட்டு அரசுகளும் ஆர்வம் காட்டியிருப்பது வடபகுதி மீனவர்களுக்கு நம்பிக்கையூட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
 
இலங்கை இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இலங்கை மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து இந்திய தரப்பினருக்கு எடுத்துக் கூறுவதற்கான வாய்ப்பு கிட்டியிருந்ததாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் மரியதாஸ் தெரிவித்தார். Read more

policeஇலங்கை கண்டியில் அங்கும்புர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். அதுகுறித்து, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து ரி56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
கண்டி – அங்கும்புர பெபிலகொல்ல முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் கார் ஒன்றில் வந்த சிலர், வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர். Read more

ministerவவுனியா அரசு செயலகத்தில் சிறுநீரகநோய்த் தடுப்பு நடவடிக்கைக்கான அலுவலகம் ஒன்றை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி கருணாரத்ன சகிதம் ஆரம்பித்து வைத்த அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமாகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, வவுனியா காவல் நிலையத்தில் சிறுநீரக நோய்த்தடுப்புக்கு வசதியாக தூய குடிநீர் நிலையம் ஒன்றையும் வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
 
இதன் போது பத்திரிகையாளர்களின் கேள்விகட்கு அமைச்சர் கீழ்கண்டவாறு பதிலளித்துள்ளார்- Read more

kanpurபாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூர் அருகே இன்று அதிகாலை தடம் புரண்டது. இதில் இது வரை 128 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் கான்பூர் உயர் போலிஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி பி.டி.ஐ.செய்தி நிறுவனம் கூறியது.

காயமடைந்தவர்களில் 76 பேர் நிலை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more

raniஅரசியல்யாப்பு பேரவை இன்று காலை இன்று காலை 9 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியது.

இதன்போது அரசியலமைப்பு பேரவையின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் உபகுழுக்களின் 6 அறிக்கைகள் அரசியல் யாப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Read more

ranilநாட்டில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் குழுநிலை விவாதம் இன்று காலை பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள் பாராளுமன்றம் உள்ளிட்ட மேலும் 22 விடயங்கள் இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. Read more

mcslஐ.எஸ். அமைப்பில் 32 இலங்கையர் இணைந்துள்ளதாக பாராளுமன்றில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று தெரிவித்த தகவலுக்கு முஸ்லிம் கவுன்சில் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பொது மக்களை தவறாக வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐஎஸ் அமைப்பில் இணைந்து உயிரிழந்த இலங்கையர் தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்ததாகவும், அதன்பின்னர் ஐஎஸ் உடன் தொர்புடைய இலங்கையர் குறித்த எவ்வித உறுதியான தகவல்களும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Read more

wdere

maithriஇலங்கையில் இனவாதம் பேசுபவர்களுக்கு எதிராக பாரபட்சம் பாராமல் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் மா அதிபருக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு கூடிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய கலந்துரையாடல் மற்றும் சக வாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். Read more

gnanasara-theroநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் மீதான வழக்கை எதிர்வரும் ஜனவரி 11ம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சட்ட மா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. Read more