Header image alt text

budget-22017 ஆம் ஆண்டுக்கான வரவசெலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. அதன்படி வரவசெலவு திட்டத்திற்கு ஆதரவாக 162 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் கிடைத்தன.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீPலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

கூட்டு எதிர்க்கட்சியினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் எதிராக வாக்களித்தனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

jaffnaவட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் சுகாதார ஊழியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இதன்படி, இன்று (புதன் கிழமை) முதல் தாம் பணிக்கு திரும்புவதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். Read more

malayaபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் சைச்சாத்திட்டு ஒருமாதம் கடந்துள்ள நிலையில் தோட்ட தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 18 தொடக்கம் 20 கிலோ வரை கொழுந்து பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது. Read more

swordஇனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டிற்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் பொலிசாரால் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வெளிபிரசேத்தில் இன்று இரவு 7.00 மணியளவில் குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்லுன்டாய்வெளி பிரதேசத்தில் வெட்டுக்காயத்துடன் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் துடிதுடித்த நிலையில் கிடப்பதைக் கண்டு அப்பகுதியால் சென்ற மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன் பிரகாரம் மானிப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன், வெட்டுக்காயங்களுக்கு இலக்கானவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் யாழ் செய்திகளுக்கு…. Read more

dfgfgfகௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் அவர்களே!

இந்த புதிய நல்லாட்சி அரசினுடைய இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் சகலருக்கும் நன்மை பயக்கும் துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சியை நோக்கி என்ற குறியீட்டுடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

இதிலே பல விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி மாத்திரமல்லாது மாணவர்களுக்கு முக்கியமாக கல்விக்கு என இப்படியாக பல நல்ல விசயங்கள் கூறப்பட்டிருந்தாலும், இந்த வரவுசெலவுத் திட்டம் நிச்சயமாக நடுத்தர அல்லது வறுமைக் கோட்டுடன் வாழக்கூடிய மக்களுக்கு முழுமையான ஒரு பயனைக் கொடுக்கக்கூடிய ஒரு வரவுசெலவுத் திட்டமாக பார்க்க முடியாமல் இருக்கின்றது. Read more

img_3893ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் வட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் மாகாண அபிவிருத்திக்கான தனது நிதியில் இருந்து ரூபா 50,000/- துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் கிராம பிள்ளையார் கோவிலின் அபிவிருத்திக்காக வழங்கியுள்ளார்.

கடந்த 10.11.016 அன்று துணுக்காய் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு. இ.பிரதாபன் முன்னிலையில் ஆலய நிர்வாக சபைத் தலைவர் திரு. மதியழகனிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உதவித்திட்டப் பணிப்பாளர் திரு. நந்தசீலன், கிராம உத்தியோகத்தர் திரு. நாகபாதம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

ereகுருநாகல் ரத்தரவூவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரத்தருவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத கார் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, காருக்குள் இருந்த இருவரால் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

fdfdfdfமட்டக்களப்பு பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தருக்கு நீதி கோரி, வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசசெயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஒரு மணி நேர பணிப் பகிஸ்கரிப்பில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலகம் முன்பாக உள்ள வீதியோரத்தில் கறுப்பு பட்டி அணிந்து ஒரு மணிநேர பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். Read more

gfgஅம்பாறை மாவட்டம் பொத்துவில் உடும்பிகுளம் பகுதியில் மரப்பொந்தொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் கைக் குண்டுகள், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் அருகம்பை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, மைக்ரோ துப்பாக்கி, மகசீன்கள் இரண்டு, 9 மில்லி மீற்றர் ரவைகள் 73 மற்றும் பல்வேறு வகையான கைக்குண்டுகள் ஆறும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. Read more

sfdfபேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

அப் பல்கலையின் கலைப் பிரிவைச் சேர்ந்த முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இறுதி வருட மாணவர்களின் வழியனுப்பும் நிகழ்வு தொடர்பில் அழைப்பிதல் வழங்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்குக் காரணம் என தெரியவருகிறது. Read more