வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைக்குழு தொடர்பில் அச் சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினை அனுப்பிவைக்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணையை மேற்கொள்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான குழுவிற்கான அனுமதியினை வழங்குமாறும், இதற்கான நிதி அனுமதியும் ஆளுநரிடம் கோரப்பட்டிருக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more
		    







