தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தவுள்ள பேரணி பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டுமெனத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இதில் அனைத்து தமிழ் மக்களுகம் பங்கெடுக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்,
தமிழ் மக்கள் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். இத்தருணத்தில் மிகக் கவனமாக, பக்குவமாக காரியங்களை செய்யாவிட்டால் அனைத்தும் தவறாகிவிடும். மீண்டும் அழிவுப் பாதைக்கு மக்களை கொண்டு போகக்கூடாது. அதனைச் செய்யவும் மாட்டோம். அதில் நாம் தெளிவாகவிருக்கின்றோம். தமிழ் மக்கள் விடயத்தில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். சில விடயங்களில் விட்டுக்கொடுப்புகள் இடம்பெற்றுள்ளன. சில விடயங்கள் எமக்குத் தெரியாமலே நடைபெறுகின்றன. நாமும் பொறுமையுடன் இருக்கின்றோம். அதனால் எம்மை மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று கருதக்கூடாது. Read more








