இலங்கையில் இவ்வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் மாத்திரம் வாகன விபத்தினால் 2200 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும் குறித்த வாகன விபத்துக்களினால் அதிகளவிலான பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற பாதுகாப்பு கடவை, அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தியமை, வீதி ஒழுங்கு முறைமை களை கடைப்பிடிக்காமை போன்றன காரணமாகவே அதிக வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. Read more








